Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அனுமதியின்றி விற்கப்பட்ட பன்றி இறைச்சிகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 25.01.2010

அனுமதியின்றி விற்கப்பட்ட பன்றி இறைச்சிகள் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சை நகரப் பகுதிகளில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட பன்றி இறைச்சிகளை நகராட்சி சுகாதார அலுவலர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.தஞ்சை நகரப் பகுதிகளில் அனுமதியின்றி பொதுசுகாதார சட்டத்துக்கு புறம்பாகவும், பொதுமக்களுக்கும், சுற்றுப்புறத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பன்றி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நகரில் திடீர் ஆய்வு நடத்தி 30 கிலோ எடைஉள்ள பன்றி இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். நகராட்சியின் அனுமதியின்றி சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார

Last Updated on Monday, 25 January 2010 06:33
 

முட்புதர்களில் அமைத்த பன்றிகள் கூடாரம் அகற்றம் : வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் அதிரடி

Print PDF

தினமலர் 22.01.2010

முட்புதர்களில் அமைத்த பன்றிகள் கூடாரம் அகற்றம் : வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் அதிரடி

வாணியம்பாடி : வாணியம்பாடி ஆற்றுப்பகுதியில், முட்புதர்களில் இருந்த பன்றிகள் கூடாரத்தை அகற்றி நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

வாணியம்பாடி நகரின் இடைப்பகுதியில் செல்லும் பாலாற்றின் கிளை ஆற்றில் ஆங்காங்கே முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு முட்புதர்களுக்குள் வழி ஏற்படுத்தி, அங்கு கூடாரம் போல் அமைத்து அதில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வந்தது. இதனால் நாளுக்குநாள் நகரில் பல இடங்களில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

பள்ளிக்கூடங்கள், கோயில்கள் உட்பட பல பகுதிகளில் பன்றிகள் நடமாட்டத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க கோரி, நகராட்சி அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சி தலைவர் சிவாஜிகணேசன் ஆலோசனையின் பேரில், நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் நகர் நல அலுவலர் பிரியா மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், நடராஜன் ஆகியோர் நடத்திய ஆய்வில் முட்புதர்களில் கூடாரம் அமைத்து பன்றிகள் வளர்ப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கூடாரத்தை நகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினர். கூடாரம் அமைத்து பன்றிகள் வளர்ப்பது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி துப்புரவு அதிகாரிகள் கூறுகையில், "ஆற்றுப்பகுதியில் முட்புதர்களில் மறைவாக கூடாரம் போட்டு பன்றிகள் வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கூடாரம் உள்ள இடத்தை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி தொடர்ந்து நடக்கும். மேலும், பன்றிகளை பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு போய் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பன்றிகள் வளர்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' இவ்வாறு அவர்கள் கூறினர.

Last Updated on Friday, 22 January 2010 07:56
 

கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறியும் பணியில் சுகதாரத்துறை

Print PDF

தினமலர் 22.01.2010

கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறியும் பணியில் சுகதாரத்துறை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் சுகாதாரத்துறையினர் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து வருகின்றனர்.

சில வாரங்களாக ஆண்டிபட்டி பகுதியில் வைரஸ், சிக்-குன்குனியா, டைபாய்டு காய்ச்சல் பரவி வருகிறது. நோய்களை பரப்புவதில் கொசுக்கள் முதலிடம் பிடிக்கிறது. கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் பல இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக கொசுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் தேக்கி வைத்திருக்கும் நீர், சுத்தம் செய்யப்படாத சாக்கடை, கழிவு நீர் தேக்கம் இவைகளில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.

எந்த இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது என்பதை கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதி முழுவதும் சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் மதிவாணன் கூறுகையில்,"கொசுக்களை ஒழிக்க சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்தின் அடிப்படையில் உற்பத்தி மையங்கள் கண்டறியப்படுகிறது. ஒட்டு மொத்தமாக எல்லா இடத்திலும் தடுப்பு நடவடிக்கை எடுப்பதால் கட்டுப்படுத்த முடியும்' என்றார.

Last Updated on Friday, 22 January 2010 07:53
 


Page 381 of 519