Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சமையல் எண்ணெய் தரம் சுகாதாரத்துறை திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 21.01.2010

சமையல் எண்ணெய் தரம் சுகாதாரத்துறை திடீர் ஆய்வு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் உணவுக்கு பயன்படுத்தும் எண்ணெய் தரம் குறித்து சுகாதார துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். அரசு பொது சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ உத்திரவில் மாநிலம் முழுவதும் உணவு பொருள் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மலைக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகளில் உள்ள சமையல் எண்ணெய், மொத்த விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மலைகோவிலூர் வட்டார அரசு டாக்டர் சாந்தி, ஈசநத்தம் அரசு டாக்டர் கௌதமன் ஆகியோரின் மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், சுகதாதார ஆய்வாளர்கள் கருப்புசாமி, டைட்டஸ் சிவலிங்கம், ராமசந்திரன், ஆகியோர் கொண்ட குழுவினர் உணவுக்கு பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணை ஆகியவை குறித்து ஆய்வு செய்து, சோதனைக்கு மாதிரி சேகரித்தனர்.

தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, பேட்ஜ் இல்லாத சுமார் மூவாயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் வகை றிமுதல் செய்யப்பட்டது. விற்பனை உரிமம் இல்லாத கடைகளில் உடனடியாக உரிமம் பெற எச்சரிக்கை செய்யப்பட்டது.

Last Updated on Thursday, 21 January 2010 07:35
 

கொசு உற்பத்தியை தடுக்க 'ஆயில் பந்து'

Print PDF

தினமலர் 20.01.2010

கொசு உற்பத்தியை தடுக்க 'ஆயில் பந்து'

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க "ஆயில் பந்து' எனும் புதிய முறையை கையாண்டு வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கொசு தொல்லை அதிகளவில் காணபடுகிறது. மாலை 6 மணிக்கு மேல் ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவு, முகத்தில் கொசுக்கள் வந்து அடிக்கும் நிலையில் பலரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் புதிய முறையை கையாண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக கொசு உற்பத்தியை தடுக்க, மரத்தூள்களை துணியில் கட்டி, பந்துபோல் உருவாக்கி குருடு ஆயிலில் குறைந்தது 10 மணி நேரம் ஊற வைத்து, கொசு உற்பத்தி செய்யும் குளம் குட்டைகளில் போட்டுவிடுகின்றனர். நன்கு ஊறிய ஆயில் பந்தால் கொசுக்கள் மூச்சு திணறி இறப்பதுடன் உற்பத்தியும் முற்றிலும் தடுக்கப்படுகிறது . நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் கூறியதாவது: நகராட்சி பகுதியில் பயன்பாடு இல்லாத குளம் குட்டைகளில் , இதுபோன்ற ஆயில் பந்துகளை போட்டுள்ளோம். இதன்மூலம் கொசு உற்பத்தி தடுக்கப்படும். மேலும் முக்கிய வீதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடந்து வருகிறது,என்றார்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:52
 

கலப்பட எண்ணெய் குறித்து அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமலர் 20.01.2010

கலப்பட எண்ணெய் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் சுகாதாரத் துறையினர், கடைகளில் கலப்பட எண்ணெய் சோதனை செய்தனர்.சாத்தான்குளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயகணேஷ் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மந்திரராஜன், ரெஜினால்ட், கிறிஸ்டோபர் செல்வதாஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் பல கடைகளில் கலப்பட எண்ணெய் சோதனை செய்தனர்.இதில் எண்ணெய் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. எண்ணெயில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:47
 


Page 383 of 519