Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ரோட்டில் கழிவுநீர் ஓட்டல்களுக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 20.01.2010

ரோட்டில் கழிவுநீர் ஓட்டல்களுக்கு 'சீல்'

சென்னை : பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில், கழிவு நீரை சாலையில் ஓட விட்ட, மூன்று ஓட்டல்களுக்கு மாநகராட்சியினர் "சீல்' வைத்தனர்.சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் அருகில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஜெயந்தி ஓட்டல், முல்லை ஓட்டல் மற்றும் காசா ஓட்டல்கள் ஆகியவை செயல்படுகின்றன. இந்த ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் சேர்வதால், சுகாதார கேடு ஏற்படுத்துவ தாக மாநகராட்சிக்கு தொடர்ந்து, புகார்கள் வந்தன.மேலும், நேற்று காலை மேயர் சுப்ரமணியன், ரிப்பன் கட்டடத்திற்கு வந்து கொண்டிருந்த போது, குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் இருந்து, கழிவு நீரை கொண்டு வந்து சாலையில் கொட்டுவதை பார்த்துள்ளார்.இதனால், அந்த ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.அதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறையினர், கழிவு நீரை சாலையில் விட்டு, சுகாதார கேடு ஏற்படுத்துவதாக கூறி, குறிப்பிட்ட மூன்று ஓட்டல்களுக்கும் நேற்று மாலை "சீல்' வைத் தனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:22
 

சென்னை மாநகராட்சி சார்பில் நீரிழிவு தடுப்பு மருத்துவ முகாம்

Print PDF

தினமலர் 20.01.2010

சென்னை மாநகராட்சி சார்பில் நீரிழிவு தடுப்பு மருத்துவ முகாம்

சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன், வரும் 30ம் தேதி நீரிழிவு நோய் பரிசோதனைக்கு சிறப்பு "மெகா' மருத்துவ முகாம்கள் நடத்தப் படும் என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை நகரில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த, சென்னை மாநகராட்சி நேற்று தனியார் மருத்துவமனை டாக்டர் களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

மேயர் சுப்ரமணியன் தலை மையில், கமிஷனர் ராஜேஷ் லக்கானி முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், அரசு பொது மருத்துவமனை ஆர்.எம்.., டாக்டர் முத்துராஜ், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.இதில், மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:சென்னை மாநகராட்சி, ஏற் கனவே தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன், பல மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளது. சமீபத்தில் பன்றிக் காய்ச்சல் நோய், உலகத்தையே அச்சுறுத்தி வந்த நிலையிலும், தமிழகத்தில் அதிக அளவில் பாதிப்பு இல்லை.சிக்-குன்-குனியா நோய் மறுபடியும் சென்னையில் பரவுகிறது. இந்த நோயை பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க, "லார்வா' நிலையிலேயே கொசுக்களை அழிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத் துள்ளது.
நோயை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் பழைய பொருட் களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப் பட்டது.கடந்த வாரம் 10 மண்டலங் களிலும் சோதனை செய்து, 25 டன் எடையுள்ள தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட்டன. நோய் வந்த பின் சிகிச்சை பெறுவதை விட, வரும் முன் காக்கும் வகையில் மாநகராட்சி மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. வரும் 30ம் தேதி, நகரில் 30 இடங்களில் சிறப்பு மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப் படும்.இதில், பிரபல தனியார் மருத்துவமனைகளின் டாக்டர் கள் கலந்து கொள்வர். இந்த மருத்துவ முகாம்களில், அனைத்து வகையான சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தாலும், குறிப்பாக நீரிழிவு நோய்க்கான பரிசோதனைக்கும் முக்கியத் துவம் கொடுக்கப்படும்.நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் படும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் கள், பாதம் பரிசோதிக்கப்பட்டு, அவைகளின் செயல்பாடுகள், சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விவரிக்கப்படும்.

இவ்வாறு மேயர் பேசினார்.மகளிர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம்: தனியார் மகளிர் கல்லூரி சார்பில், என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் புழலில் நடந்தது.பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவியர், புழலில் ஒரு வார காலம் சிறப்பு முகாம் நடத்தினர். கல்லூரி முதல்வர் கஸ்தூரி ராஜா துவக்கி வைத்தார். முகாமை, திட்ட அலுவலர்கள் லதா, நதியா ஆகியோர் வழி நடத்தினர்.இதையொட்டி, பொதுமக்களுக்கு மாணவிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய் தனர்.மாதவரம் துணை ஆணையர் ஆனி விஜயா மரம் நடும் விழாவை துவக்கி வைத்தார். முகாமில், அரசு பள்ளி மாணவர் களுக்கான சுகாதார கருத்தரங்கம் நடத்தப்பட்டது.இதேபோல், மாணவர்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழுவின ருக்கும் போட்டிகள் நடத்தப் பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவு விழாவில் பேரூராட்சித் தலைவி மகாதேவி, கல்லூரி செயலர் ராஜகோபாலன், அரிமா சங்கத் தலைவர் மாணிக்கம், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பக்தவத்சலு உள்ளிட்டோர் பங்கேற்றனர

Last Updated on Wednesday, 20 January 2010 10:20
 

3 ஓட்டல்களுக்கு சீல்

Print PDF

தினகரன் 20.01.2010

3 ஓட்டல்களுக்கு சீல்

சென்னை : கழிவுநீரை சாலையில் விட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய 3 ஓட்டல்களுக்கு மாநகராட்சி நேற்று சீல் வைத்தது.

மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில ஓட்டல்கள் கழிவுநீரை சாலையில் விட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதற்காக, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன்படி, மண்டல அதிகாரி ஜெ.அட்லி, உதவி சுகாதார அதிகாரி டாக்டர் எம்.ராஜா, சுகாதார ஆய்வாளர்கள், உணவு ஆய்வாளர்கள் ஆகியோர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகங்களை நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, காஜா உணவு விடுதி, முல்லை உணவு விடுதி, விருதுநகர் தங்கும் விடுதியில் உள்ள ஜெயந்தி உணவு விடுதி ஆகியவை, கழிவுநீருடன் சமையல் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் நேரிடையாக செலுத்துவதால் அடைப்புகள் ஏற்பட்டு, கழிவுநீர் சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை கண்டறிந்தனர்.

இதன்மூலம் பொதுமக்களுக்கும், உணவு உண்ண வருபவர்களுக்கும் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால், பொது சுகாதார சட்டத்தின்படி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அந்த 3 உணவு விடுதிகளுக்கும் சீல் வைத்தனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Last Updated on Wednesday, 20 January 2010 10:18
 


Page 384 of 519