Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

5,000 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி

Print PDF

தினமணி             05.09.2013

5,000 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை 5,000 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் செயல்பட்டு வரும் சர்வதேச கால்நடை சேவை அமைப்பு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இம் மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக லண்டனில் இருந்து 20 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மதுரை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் வெறி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியில் 5 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிரண்யிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திங்கள்கிழமை முதல் இம்முகாம் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சிக்கு உள்பட்ட 1-வது, 16-வது வார்டுகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஈரோடு கங்காபுரம் பகுதியில் 70 நாய்களுக்கும், காந்தி நகர் பகுதியில் 102 நாய்களுக்கும் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போடப்பட்டது.

மாநகராட்சி 46-வது வார்டுக்கு உள்பட்ட மூலப்பாளையம் கக்கன்ஜி நகர் பகுதியில் தடுப்பூசி போடும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை மேயர் ப.மல்லிகா பரமசிவம் தொடங்கிவைத்தார். துணை மேயர் கே.சி.பழனிசாமி தலைமை வகித்தார்.

இம்முகாமில் வெளிநாட்டு கால்நடை மருத்துவர்கள் 10 பேர் கொண்ட குழுவினர்,   தெருநாய்களுக்கு தடுப்பூசி போட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் (பொ) ஆறுமுகம் உதவி ஆணையர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 05 September 2013 08:08
 

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி தீவிரம் : கொசு உற்பத்தி ஆதாரம் வீடு,வீடாக அழிப்பு

Print PDF

தினமலர்                04.09.2013

டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி தீவிரம் : கொசு உற்பத்தி ஆதாரம் வீடு,வீடாக அழிப்பு

திருச்சி: டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் வீடுவீடாக சென்று கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை அழிக்கும் பணியை திருச்சி மாநகராட்சி துவக்கியுள்ளது. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் நோய் தாக்குதல் காரணமாக திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.

காய்ச்சல் தீவிரமடைந்ததன் காரணமாக திருச்சி மாநகரில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிந்தது. தேங்கி கிடக்கும் நல்ல சுத்தமான தண்ணீரில் இருந்து தான் டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கடந்த வாரத்தில் தினமும் மாலை நேரங்களில் மழை பெய்ததால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டது. அதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியை மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. முதல்கட்டமாக, டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

வீடுகளில் உள்ள சுத்தமான தண்ணீர் பேரல்கள், கொட்டாங்குச்சி, பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் தேங்கும் தண்ணீர் மூலம் டெங்கு நோயை உற்பத்தி செய்யும் கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதனால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நல்ல தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து வைக்க வேண்டாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இவற்றை கடைபிடிக்காத இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நல்ல தண்ணீர் கீழே கொட்டப்படுவதோடு, பாத்திரங்களும் பறிமுதல் செய்யப்படும்.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சியின் நான்கு கோட்ட பகுதிகளில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் மாநகராட்சி பணியாளர்கள், நர்சிங் பயிற்சி மாணவிகள், கல்லூரி மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த விழிப்புணர்வு பணியை அரியமங்கலம் கோட்டம் 24வது வார்டு பிள்ளைமார் தெருவில் நேற்று, தமிழக அரசின் தலைமை கொறடா மனோகரன் துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக் மீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்களில் தலா ஐந்து குழுக்கள் வீதம், தினமும் ஒவ்வொரு குழுவும் 3 ஆயிரம் வீடுகளுக்கு செல்வார்கள்.

இந்த வகையில் நான்கு கோட்டங்களில் தினமும் 60 ஆயிரம் வீடுகளிலும், மூன்று தினங்களுக்கு ஒரு லட்சத்து, 80 ஆயிரம் வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். "டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு மாநகர மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இலவச கொசு வலைகள் முதல்கட்டமாக கூவம் குடிசைவாசிகளுக்கு கிடைக்கும்

Print PDF

தினமலர்                04.09.2013

இலவச கொசு வலைகள் முதல்கட்டமாக கூவம் குடிசைவாசிகளுக்கு கிடைக்கும்


சென்னை:கொசுக் கடியில் இருந்து, பொது­மக்­களை காக்க, மாந­க­ராட்சி சார்பில் அறி­விக்­கப்­பட்ட இல­வச கொசு வலைகள் வழங்கும் திட்­டத்தை, இம்­மாத இறு­திக்குள் செயல்­ப­டுத்த மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது. முதல் கட்­ட­மாக, கூவம் பகு­தியில் வசிப்­போ­ருக்கு வழங்­கப்­பட உள்­ளன.

ஐந்து லட்சம்

சென்­னையில் கொசுக் கடியில் இருந்து பொது­மக்­களை காக்க, நொச்சி செடி வளர்ப்பு மற்றும் இல­வச கொசு வலைகள் என, இரண்டு முக்­கிய திட்­டங்­களை, கடந்த பட்­ஜெட்டில், மேயர் சைதை துரை­சாமி அறி­வித்தார்.
இதில், நொச்சி செடி­க­ளுக்கு, மாந­க­ராட்சி முதல்­முறை ஒப்­பந்தம் கோரிய போது, தனியார் நிறு­வ­னங்கள் அதிக தொகை கோரின. இதனால், இரண்­டா­வது முறை­யாக ஒப்­பந்தம் கோரப்­பட்­டது.

இதன்­படி, தற்­போது, ஐந்து லட்சம் நொச்சி செடிகள் கொள்­முதல் செய்ய மாந­க­ராட்சி ஒப்­பந்த நிறு­வ­னத்தை தேர்வு செய்­துள்­ளது. இம்­மாத இறு­திக்குள், நொச்சி செடிகள் குடிசை பகு­தி­களில் நடவு செய்­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அடுத்­த­தாக இல­வச கொசு­வ­லைகள் வழங்கும் திட்­டத்தில், இந்த கொசு­வ­லைகள் வழங்­கு­வ­தற்­கான தகு­தி­யான பய­னா­ளிகள், மண்­டல வாரி­யாக தேர்வு செய்யும் பணி துவங்­கப்­பட்­டது.

முதல் கட்­ட­மாக, 78 ஆயி­ரத்து, 184 பய­னா­ளிகள் தேர்வு செய்­யப்­பட்டு, 1.17 கோடி ரூபாய் மதிப்பில் கொசு வலைகள் வாங்க மாந­க­ராட்சி ஒப்­பந்தம் கோரி­யது. தற்­போது இந்த கொசு­வ­லைகள் வாங்க தனியார் நிறு­வ­னத்­திற்கு கொள்­முதல் ஆணை வழங்­கப்­பட்டு இருப்­பதால், இம்­மாத இறு­திக்குள் கொசு­வ­லை­களை வினி­யோகம் செய்ய மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.

முதல்­கட்­ட­மாக கூவம் கரை­யோர பகுதி குடி­சை­க­ளுக்கு கொசு வலைகள் வழங்­கப்­பட உள்­ளன. தொடர்ச்­சி­யாக பல்­வேறு கட்­ட­மாக ஒப்­பந்தம் கோரப்­பட்டு, இந்த ஆண்டு இறு­திக்குள், ஐந்து லட்சம் பயனா­ளி­க­ளுக்கு கொசு வலைகள் வழங்க மாந­க­ராட்சி திட்­ட­மிட்டு உள்­ளது.

கட்­டுப்­ப­டுத்த முடியும்

இது குறித்து, சுகா­தார துறை அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

கொசு தொல்­லைக்கு தீர்வாக இம்­மாத இறு­திக்குள் கொசு வலைகள் வழங்­கப்­படும். நொச்சி செடிகள் நடவு செய்யும் பணி­களும் இம்­மாத இறு­திக்குள் துவங்­கப்­படும். அது­மட்­டு­மல்­லாமல் கூடுதல் பணி­யா­ளர்கள், கூடுதல் இயந்தி­ரங்கள் கொசு ஒழிப்பு நட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டுகின்றன.

கொசு மருந்து கைதெ­ளிப் பான் 174, புகை பரப்பும் இயந்திரம் 174 என, புதிய இயந்­தி­ரங்கள் கொள்­முதல் செய்­யப்­பட உள்­ளன. வாடகை வாக­னங்கள் பயன்­ப­டுத்த ஒப்­பந்தம் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது. இதன் மூலம் கொசு தொல்­லையை கட்­டுப்­ப­டுத்த முடியும். இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.

முதல்­கட்­ட­மாக கூவம் கரையோர பகுதி

குடி­சை­க­ளுக்கு கொசு வலைகள் வழங்­கப்­பட உள்­ளன. தொடர்ச்­சி­யாக பல்­வேறு கட்டமாக ஒப்­பந்தம் கோரப்­பட்டு, இந்த ஆண்டு இறு­திக்குள், ஐந்து லட்சம் பயனா­ளி­க­ளுக்கு கொசுவலைகள் வழங்க மாநகராட்சி திட்­ட­மிட்டு உள்­ளது.

 


Page 40 of 519