Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நவீன கழிவறை கட்ட இடம்: அமைச்சர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 13.01.2010

நவீன கழிவறை கட்ட இடம்: அமைச்சர் நேரில் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நவீன முறையில் இலவச கழிவறை அமைப்பதற்கான இடத்தை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் நெப்போலியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நவீன முறையில் இலவச கழிவறை மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முப்பது லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பெரம்பலூரில் ஃபிப்., 4ம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, அரசு பாலிடெக்னிக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, அரசு ஐ.டி.., திறப்பு விழா, காரை சமத்துவபுரம் திறப்பு விழா, வேலூர் மற்றும் நான்கு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய தொடக்க விழா, கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க விழா, நான்கு பாலங்கள் திறப்பு விழா, மாவட்ட விளையாட்டு அரங்கம், சிறுவர் பூங்கா, மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கும் ஆகிய விழாக்களில் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார். அப்போது, புது பஸ் ஸ்டாண்டில் நவீன கழிவறைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் ராசா பங்கேற்கிறார்.

சிறப்பு பொருளாதார மண்டலம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் முதல்வர் அல்லது துணை முதல்வர் பங்கேற்று துவக்கி வைக்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, கலெக்டர் விஜயகுமார், எஸ்.பி., வனிதா, டி.ஆர்..,பழனிசாமி, நகராட்சி தலைவர் ராஜா, யூனியன்குழு தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர

Last Updated on Wednesday, 13 January 2010 07:06
 

கடையநல்லூரில் மதுரை மருத்துவ குழுவினர் ஆய்வு

Print PDF

தினமலர் 13.01.2010

கடையநல்லூரில் மதுரை மருத்துவ குழுவினர் ஆய்வு

கடையநல்லூர்:மர்மக் காய்ச்சல் தொட ர்பாக மதுரை ஐ.சி.எம். ஆர்.மருத்துவ குழுவினர் நேற்று கடையநல்லூர் பகுதிகளில் காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு ரத்த மாதிரி மேற்கொண்டனர். கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு மீண்டும் காய்ச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதார துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், சுகாதார துறை செயலாளர் சுப்புராஜ், இயக்குநர் இளங்கோ, கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 7ம் தேதி வருகை தந்தனர். நோயாளிகளிடம் நோய் பாதித்தது குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து கடையநல்லூரில் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்திட மதுரையில் இருந்து மருத்துவ குழு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி கிருஷ்ணாபுரம், பேட்டை ஆகிய பகுதிகளில் மதுரை ஐ.சி.எம்.ஆரில் இருந்து பூச்சியியல் வல்லுநர் பரமசிவன் தலைமையில் டெக்னீசியர்கள் கொண்ட குழுவினர் காய்ச்சல் பாதித்த நோயாளிகளின் ரத்தத்தின் மாதிரிகளை எடுத்தனர். சுமார் 400க்கும் மேற்பட்ட நோயாளிகளின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டதுடன், அவற்றினை மதுரை ஆய்வகத்தில் ஆய்வு செய்ய மருத்துவ குழுவினர் எடுத்து சென்றனர். மதுரையில் இருந்து வந்த மருத்துவ குழுவினருடன் கடையநல்லூர் நகராட்சி தலைவர் இப்ராகிம், கமிஷனர் அப்துல் லத்தீப், மருத்துவ அதிகாரி டாக்டர் ஜவஹர் நிஷா, சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், மற்றும் சுகாதார துறையினர் உடன் சென்றனர

Last Updated on Wednesday, 13 January 2010 06:47
 

போலி டீத்தூள் தொழிற்சாலை மாடர்ன் ரைஸ் மில்லுக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 13.01.2010

போலி டீத்தூள் தொழிற்சாலை மாடர்ன் ரைஸ் மில்லுக்கு 'சீல்'

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தனியார் மாடர்ன் ரைஸ் மில்லில் செயல்பட்ட போலி கலப்பட டீத்தூள் தொழிற்சாலையை சுகாதார துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், போலி கலப்பட டீத்தூள் தொழிற்சாலை செயல்படுவதாக, சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், வட்டார மருத்துவ அலுவலர் ரவிக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் கலியபெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் விக்கிரவாண்டி எஸ்.ஆர்.மாடர்ன் ரைஸ் மில் வளாகத்தில் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் ராஜாமுகமது என்பவருக்கு சொந்தமான ரைஸ்மில்லின் ஒரு பகுதியில் போலி கலப்பட டீத்தூள் தயாரிப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் வருவதை பார்த்த தொழிலாளர்கள் தப்பி ஓடினர்.

நெல் களத்தில் புளியங் கொட்டை, முந்திரி கொட்டை, மண், உமி கலந்த கலவை பவுடரை உலர வைத்திருந்தததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். அங்கு சிறிய மெஷினில் கலப்பட தூளை அரைத்து தரம் பிரித்து மூட்டைகளில் பிடிக்கப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கலப்பட டீத்தூள் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களான புளியங்காட்டை மாவு, முந்திரி கொட்டை மாவு, பாலி புரோபிலின் கெமிக்கல், உளுந்து தோல், கலர் மண் ஆகியவைகள் கொண்ட மூட்டை 104ம் போலி டீத்தூள் தயாரித்த மூட்டை 13ம் பறிமுதல் செய்யப்பட்டன. பின் சுகாதாரத் துறையினர் மாடர்ன் ரைஸ் மில்லிற்கு சீல் வைத்தனர். போலி டீத்தூள் தொழிற்சாலையை விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி பார்வையிட்டார். கலப்பட டீத்தூள் சேலம்,கரூர், சென்னை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு சப்ளை செய்த ஆதாரங்களை டி.எஸ்.பி., கைப்பற்றினர் . இதன் மூலப்பொருட்கள் பண்ருட்டி பகுதிகளிலிருந்து வர வழைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Last Updated on Wednesday, 13 January 2010 06:43
 


Page 391 of 519