Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது

Print PDF

தினகரன் 08.01.2010

நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது

நெல்லை : நெல்லைக்கு வந்த சுகாதாரதுறை அமைச் சர் எம்ஆர்கே.பன்னீர்செல் வம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச் சல் மக்கள் மத்தியில் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி மற்றும் சுகா தாரதுறை சார்பில் இந் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலப்பாளையத்தில் ஒரே இடத்தில் 700 சுகாதார பணியாளர்கள் கூடி கூட்டு துப்புரவு பணி நடந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத் தில் உள்ள டாக்டர்களும் இப்பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். தற் போது இந்நோயின் தாக்கம் குறைந்து வருகிறது.

சித்த மருத்துவம் சார்பி லும், ஹோமியோபதி சார்பி லும் இந்நோயை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர், அமுக்கரா சூரணம், பிண்ட தைலம் போன்ற மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

2008&ம் ஆண்டில் 30 லட்சத்து 43 ஆயிரத்து 806 பேருக்கு காய்ச்சல் இருந்தது. 2009&ம் ஆண்டில் அது 27 லட்சத்து 43 ஆயிரமாக குறைந்துள்ளது. நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் 897 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலமாக கூட வைரஸ் நோய் பரவியிருக்க லாம். பாளை சித்த மருத்துவ கல்லூரியில் ஆராய்ச்சி பிரி வை மாற்றியது மத்திய அரசு முடிவாகும். அதில் நாங்கள் தலையிட முடியாது என் றார்.

முன்னதாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மைதீன்கான், சுகாதாரதுறை முதன்மை செயலாளர் சுப்பு ராஜ், இந்திய மருத்துவம் மற் றும் ஹோமியோபதி துறை முதன்மை செயலாளர் ராஜ் குமார், பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, மருத்துவதுறை இயக்குனர் டாக்டர் நந்தகோபாலசாமி, கலெக்டர் ஜெயராமன், இணை இயக்குனர் உஷா ரிஷபதாஸ், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.வல்லுநர்குழு ஆராய்கிறது

நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் நோயில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, எலி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை. ரத்த மாதிரி பரிசோதனையில் இது ஒரு புது விதமான வைரஸ் நோய் என்பது தெரிய வந்துள்ளது. இதை கண்டறிய மதுரையில் இருந்து ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம்) ஆராய்ச்சிக்குழு வர உள்ளது. ஏற்கனவே ஓசூரில் இருந்து வந்த பூச்சியியல் வல்லுனர் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

Last Updated on Friday, 08 January 2010 10:36
 

போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன் 08.01.2010

போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் : நாமக்கல்லில் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சகாயம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க தலைவர் கணபதி, நாமக்கல் ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் சுரேஷ்குமார், திருவள்ளுவன், மணிவண்ணன், கிங் கல்லூரி ரோட்ராக்ட் சங்க மாணவ&மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்கள், போலியோ சொட்டு மருந்தின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய தட்டிகளுடன் ஊர்வலமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குமாரபாளையம் நகராட்சி ஏற்பாடு22 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்பள்ளிபாளையம், ஜன.8: குமாரபாளையம் நகராட்சியில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க 22 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக 22 மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. காவேரி நகர் பிள்ளையார் கோவில், ஏரித்தெரு விநாயகர் கோவில், சின்னப்பநாய்க்கன் பாளையம் நகராட்சி துவக்கப்பள்ளி, வேதாந்தபுரம் சித்திவிநாயகர் கோவில், சேலம் மெயின் ரோடு நகராட்சி அலுவலகம், கத்தாளைபேட்டை, காட்டூர், திருவள்ளுவர் நகர், காளியண்ண கவுண்டர் லேஅவுட், காவலர்வீதி, நாராயண நகர் ஆகிய சத்துணவு மையங்கள், காந்திபுரம் சூரியநாராயணா திருமண மண்டபம், மேற்கு காலனி அண்ணா திருமண மண்டபம், நாராயண நகர் சத்துணவு மையம், குமாரபாளையம் அரசு மருத்துவமனை, நகராட்சி பேருந்து நிலையம், அம்மன்நகர் மாரியம்மன் கோயில், ராஜராஜன் நகர் மாரியம்மன் கோவில், கொத்துக்காரன் காடு மாரியம்மன் கோயில், நேதாஜிநகர் ரோட்டரி ஹால், பாலிக்காடு விநாயகர்கோயில், ஆனங்கூர் பிரிவில் உள்ள டிரன்சிட் 2 ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும்படி நகராட்சி ஆணையர் மாணிக்கவாசகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Friday, 08 January 2010 10:35
 

மேலப்பாளையம் ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமலர் 08.01.2010

மேலப்பாளையம் ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

திருநெல்வேலி : மேலப்பாளையம் ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.நெல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்திற்கு பின் மேலப்பாளையம் ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார். அனைத்து வார்டுகளுக்கும் அமைச்சர் சென்று ஆய்வு செய்தார். குழந்தைகள் நல வார்டு சுத்தமாக இல்லை என ஒருவர் புகார் கூறினார். மேலப்பாளையத்தில் கலங்கிய குடிநீர் வருவதாகவும் அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் மற்றும் கமிஷனருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஜாகீர் உசேன், டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறினார். அப்போது அருகில் இருந்த டாக்டரிடம் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அவருடன் அமைச்சர் மைதீன்கான், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சித்த மருத்துவ கையேடு வெளியீடு : ஆய்வு கூட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சிக்குன்-குனியா, பன்றிக் காய்ச்சல் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவம் குறித்த விளக்க கையேட்டை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட முதல் பிரதியை சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் பெற்றுக் கொண்டார். இதில் கலெக்டர் ஜெயராமன், சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ், இந்திய மருத்துவம் முதன்மை செயலாளர் ராஜ்குமார், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார், ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன், டாக்டர் சுபாஷ் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 08 January 2010 07:56
 


Page 395 of 519