Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சிதம்பரம் நகராட்சி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினதந்தி 08.01.2010

சிதம்பரம் நகராட்சி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

pR•TW• SLWÖyp Th‡ ›¥ 23 ÛUVjL¸¥ ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰ YZjLTP E•[RÖL BÛQVÖ[Ÿ ^ÖÁNÁ i½•[ÖŸ.

pR•TW• SLWÖyp BÛQ VÖ[Ÿ ^ÖÁNÁ ÙY¸ ›y |•[ ÙNš‡e h½‘¥ i½ ›£TRÖY‰:-

23 ÛUVjL•

pR•TW• SLWÖyp Th‡ L¸¥ 23 ÛUVjL¸¥ Y£f\ 10-‹ ÚR‡ ˜R¥ A|†R UÖR• 2-‹ ÚR‡ YÛW LÖÛX 7 U‚ ˜R¥ UÖÛX 5 U‚ YÛW ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰ YZjLTP E•[‰.C‹R ˜LÖ-¥ 5 YV‡¼hyTyP AÛ]†‰ hZ‹ÛRLºeh• ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰ YZjL T|f\‰.C‹R ˜LÖ• JªÙYÖ£ YÖŸ|L¸¨• E•[ T•¸e iPjL•, U£†‰Y UÛ]L•, AjLÁYÖzL•, ÚT£‹‰ ŒÛXV• U¼¿• N†‰Q° ÛUV• ÚTÖÁ\ CPjL¸¥ SPef\‰.TVÁT|†‡ ÙLÖ•[ ÚY|•

BLÚY ÙTÖ‰UeL• C‹R A¡VYÖš‘Û] TVÁ T|†‡eÙLց| 5 YV‰ehyTyP AÛ]†‰ hZ‹ÛRLºeh• ÚTÖ¦ÚVÖ ÙNÖy| U£‹‰ ÚTÖy|e ÙLց| ÚTÖ¦ÚVÖ C¥XÖR EXÛL TÛP†‡P AÛ] Y£• J†‰ÛZ" A¸eh UÖ¿ÚLy|e ÙLÖ• fÚ\Á.CªYÖ¿ BÛQVÖ[Ÿ ^ÖÁNÁ h½‘y|•[ÖŸ.

Last Updated on Friday, 08 January 2010 07:31
 

தயார் நிலையில் 8 நவீன கழிப்பிடங்கள்: ஆணையர்

Print PDF

தினமணி 07.01.2010

தயார் நிலையில் 8 நவீன கழிப்பிடங்கள்: ஆணையர்

மதுரை, ஜன. 6: மதுரை நகரில் மாட்டுத்தாவணி உள்ளிட்ட 8 இடங்களில் தனியார் மூலம் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இவற்றை மத்திய அமைச்சர் மு..அழகிரி விரைவில் திறந்துவைப்பார் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

தில்லியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைபோன்று மதுரையிலும் அமைத்துத் தருமாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சிப் பகுதியில் 20 இடங்களில் நவீன கழிப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது மாட்டுத்தாவணி பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, சுந்தரராஜபுரம் மார்க்கெட், குரு தியேட்டர் அருகில் ஆகிய 8 இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு தயார்நிலையில் உள்ளன.

இவை தவிர மேலும் 12 நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.

இந்த நவீன கழிப்பறைகளை அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்களே, சீருடைப் பணியாளர்கள் மூலம் பராமரிக்க உள்ளன.

இவற்றை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விரைவில் திறந்துவைக்க உள்ளார் என்றார் ஆணையர்.

முன்னதாக பைபாஸ் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளையும், பழங்காநத்ததில் தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறையையும் ஆணையர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

சத்யசாய் நகர் பகுதியிலுள்ள கால்வாய், மூலக்கரை மற்றும் தத்தனேரி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி ஆகியவற்றையும் ஆணையர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி ஆணையர் (வருவாய்) இரா.பாஸ்கரன், உதவி ஆணையர் (மேற்கு) ரவீந்திரன், நிர்வாகப் பொறியாளர் மோகன்தாஸ், உதவி செயற்பொறியாளர் சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Thursday, 07 January 2010 10:56
 

புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை

Print PDF

தினமணி 07.01.2010

புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை

பெரம்பலூர், ஜன. 6: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குன்னம் வட்டத்தில் உள்ள லெப்பைகுடிகாடு பகுதியில் அமைய உள்ள புதைச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவது குறித்த அமைதிப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் எம்.விஜயகுமார் பேசியது:

லெப்பைகுடிகாடு பேரூராட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.99.70 லட்சம் மதிப்பீட்டில் புதைச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனடிப்படையில், லெப்பைகுடிகாடு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பென்னகோனம், வடக்களூர், ஒகளூர், ஆடுதுறை, அத்தியூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், ஒகளூர் வாய்க்காலில் கழிவுநீரை விட்டால், விவசாய நிலம், சுற்றுச்சூழல் மற்றும் பாசன ஏரிகள் பாதிக்கும் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் செயல்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜன. 19-ம் தேதி கூட்டம் நடைபெறும் என்றார் விஜயகுமார். இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மா. தேவதாஸ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சம்பந்தம், மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜே. காஜாமொய்தீன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஏ. ரங்கசாமி மற்றும் லெப்பைகுடிகாடு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 07 January 2010 10:52
 


Page 397 of 519