Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

Print PDF

தினமலர் 07.01.2010

நகராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. சேர்மன் கெய்க்வாட், மேலாளர் சம்பந்தம் முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் 73 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் மூன்று பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்

Last Updated on Thursday, 07 January 2010 06:24
 

டீக்கடைகளில் ரகசிய கண்காணிப்பு

Print PDF

தினகரன் 07.01.2010

டீக்கடைகளில் ரகசிய கண்காணிப்பு

சென்னை : கலப்பட டீத்தூளில் போடப்பட்ட டீ குடித்த 3 பெண்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து நகர் முழுவதும் டீக்கடைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாநகராட்சியுடன் இணைந்து சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.புளியந்தோப்பு கார்ப்பரேஷன் பெரிய லேன் பகுதியில் வசிக்கும் விஜயா என்பவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதி டிமிலர்ஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ வாங்கினார்.

வீட்டுக்கு வந்த அவர், தாய் பாக்கியலட்சுமி மற்றும் மருமகள் ரேகா ஆகியோருடன் டீயை குடித்தார். குடித்த சில மணி நேரத்திலேயே 3 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட டீக்கடையில் சோதனை நடத்தினார். டீத்தூள், பாய்லர் மற்றும் அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. டீ மாஸ்டர் வெங்கடேசன், உரிமையாளர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.டீக்கடையில் கைப்பற்றப்பட்ட டீத்தூள், எந்த கடையில் இருந்து வாங்கப்பட்டது, எந்தக் கம்பெனியின் தயாரிப்பு என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நகரில் உள்ள பல டீ கடைகளில் இதுபோல கலப்பட தூளில் டீ போடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், குறிப்பிட்ட கடையில் கலப்படம் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் புகார் செய்தால்தான் போலீசார் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பொதுமக்கள் தகவல் மட்டுமே தெரிவிப்பதால், நகரில் உள்ள டீக்கடைகளை போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

அதில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவது தெரிந்தால், மாநகராட்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சோதனை நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் இரு துறைகளின் அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு சுகாதார துறை அதிகாரிகள் அயப்பாக்கம், அம்பத்தூர், திருவேற்காடு, பூந்தமல்லி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி போலி டீத்தூள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Thursday, 07 January 2010 06:13
 

போன் செய்தால் போதும் வீட்டிற்கே சென்று ரத்த பரிசோதனை செய்யும் திட்டம்; சென்னை மாநகராட்சி விரைவில் அறிமுகம்

Print PDF

மாலை மலர் 06.01.2010

போன் செய்தால் போதும் வீட்டிற்கே சென்று ரத்த பரிசோதனை செய்யும் திட்டம்; சென்னை மாநகராட்சி விரைவில் அறிமுகம்

சென்னை மநாகராட்சி மற்ற மாநிலங்களில் உள்ள மாநகராட்சிகளை விட முன் மாதிரியான திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

பள்ளி மாணவ-மாணவி களுக்கு பல்வேறு சலுகை கள், இலவச பிறப்பு இறப்பு சான்றிதழ், இலவச சவப்பெட்டி, அமரர் ஊர்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த மற்றொரு திட்டத்தை பொங்க லுக்கு பிறகு அறிமுகப்படுத்து கிறது.

வீடு வீடாக சென்று ரத்த மாதிரியை எடுத்து அதை பரிசோதனை கூடத்தில் சோதனை செய்து அவர் களது வீட்டில் கொடுக்கப் படும். இதற்கு கட்டணமாக ரூ. 15 வசூலிக்கப்பகிறது.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் மாநகராட்சி இந்த திட்டத்தை கொண்டு வருகிறது.

குறிப்பாக காலை நேரத் தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத பெண் களுக்கு இந்த திட்டம் உதவி யாக இருக்கும். ரத்த மாதிரி எடுப்பதற்காக 10 மாநக ராட்சி மண்டலத்திலும் தலா ஒரு ஊழியர் நியமிக்கப்படு கிறார்கள்.

தேவையை பொறுத்து கூடுதலாக ஊழியர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி யில் இருந்து 1913 என்ற எண் ணுக்கு போன் செய்தால் போதும். உடனே ஊழியர் ரத்த மாதிரி எடுக்க வீட்டிற்கு வருவார். அவர் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்து அவ ரது வீட்டிற்கே சென்று முடிவை கொடுப்பார்.

சென்னையில் 6 மாநக ராட்சி நவீன மருத்துவ பரி சோதனை கூடங்கள் உள் ளன. இவற்றின் மூலமாக பரிசோதனை மேற்கொள் ளப்படும். வெளி மார்க் கெட்டை விட மாநகராட்சி பரிசோதனைக் கூடத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை கட்டணம் குறைவாக இருக்கும்.

.சி.ஜி. எடுக்க ரூ. 40, அல்ட்ரா சவுண்ட் பரி சோதனை செய்ய ரூ. 150, எக்ஸ்ரே எடுக்க ரூ. 50, ரத்த பரிசோதனை செய்ய ரூ. 15.

நுரையீரல் செயல் பாட்டை சோதனை செய்ய ரூ. 100 என குறைந்த அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Wednesday, 06 January 2010 12:26
 


Page 400 of 519