Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி             04.09.2013

திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

 
 
 
 
 
 
 
 
 
திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியை அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பணி

திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் உற்பத்தி ஆதாரங்களை அழித்தல் மற்றும் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பணி நேற்று தொடங்கியது. அரியமங்கலம் கோட்டம் 24–வது வார்டில் பாலக்கரை பிள்ளைமார் தெரு பகுதியில் அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் வீடு, வீடாக சென்று துண்டுபிரசுரம் மற்றும் டெங்கு கொசுவை அழிக்க தேவையான அபேட் மருந்தும் வழங்கினார். இந்த பணி குறித்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி கூறியதாவது:–

60 ஆயிரம் வீடுகள்

மாநகராட்சி முழுவதும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களிலும் தலா 5 சிறப்பு குழுக்கள் வீதம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசுப்புழு ஆதாரங்களை அகற்றும் பணி தினமும் ஒவ்வொரு குழுவும் 3 ஆயிரம் வீடுகள் வீதம் நான்கு கோட்டங்களிலும் 60 ஆயிரம் வீடுகளிலும், 3 தினங்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீடுகளில் இப்பணிகள் நடைபெறும்.

மேலும் டெங்கு உருவாக்கும் கொசுக்கள் உற்பத்திக்கான ஆதாரங்களான தேவையற்ற பழைய டயர்கள், ஓடுகள், ஓட்டை உடைசல் பொருட்களை அப்புறப்படுத்தி சாலை ஓரத்தில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குழுவுடன் ஒரு லாரியும் செல்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசு உற்பத்தி ஆதாரங்கள் உடனுக்குடன் லாரியில் ஏற்றப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.

பாத்திரங்கள் பறிமுதல்

நல்ல தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து வைக்க வேண்டாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

இவற்றை கடைப்பிடிக்காத இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நல்ல தண்ணீர் கீழே கொட்டப்படுவதுடன், பாத்திரங்களும் பறிமுதல் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகர மக்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெயா, துணை மேயர் மரியம் ஆசிக், கோட்ட தலைவர் சீனிவாசன், கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 45–வது வார்டு பகுதியில் விநாயகர் நகரில் டெங்கு கொசு விழிப்புணர்வு பணியை கோட்ட தலைவர் ஞானசேகர் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பணியில் கோட்ட உதவி ஆணையர்கள் தயாநிதி, தனபாலன், பாஸ்கரன், ரெங்கராஜன், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அல்லி, உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், கண்ணன், அமுதவள்ளி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவ–மாணவிகள், சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழித்தனர்.

 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி

Print PDF

தினத்தந்தி              03.09.2013

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி

 

 

 

 

 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

வெறிநாய் நோய் தடுப்பூசி

ஊட்டியில் செயல்பட்டு வரும் சர்வதேச கால்நடை சேவை அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தெருநாய்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக லண்டனில் இருந்து 20 டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் மதுரை மற்றும் ஈரோடு ஆகிய 2 மாநகராட்சிகளில் வெறிநாய் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியில் 5 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக இலக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நேற்று முதல் இதற்கான பணிகள் தொடங்கியது.

172 நாய்கள்

முதற்கட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு மற்றும் 16-வது வார்டுகளில் நேற்றுக்காலை வெறிநாய் நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இதில் அந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு இலவசமாக வெறிநாய் நோய் தடுப்பூசி போடப்பட் டது. அப்போது 10 பேர் கொண்ட குழுவினர் 2 வார்டுகளுக்கு சென்று அந்த பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய்க்களை வலை வைத்து பிடித்தனர். அதன்பின்னர் பிடிக்கப்பட்ட நாய்களுக்கு தடுப்பூசிகளை போட்டு விட்டு விடுவித்தனர். ஈரோடு கங்காபுரம் பகுதியில் 70 நாய்களுக்கும், காந்திநகர் பகுதியில் 102 நாய்களுக்கும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.

 

மாநகராட்சி பகுதியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்

Print PDF

தினகரன்              02.09.2013

மாநகராட்சி பகுதியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள நாய்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பூசி (ரேபிஸ்) போடப்படவுள்ளது. இதற்கான பணிகள் நாளை தொடங்குகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு இதனை பராமரிக்க லக்காபுரத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் மாநகராட்சி பகுதிகளில் பெருகி வரும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

 தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் வாகன ஓட்டிகளையும் துரத்தி கடித்து வருகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையாக கால்நடை மருத்துவமனைக்கு சென்று அதற்குரிய தடுப்பூசிகளை போட்டு வருகிறார்கள்.

ஆனால் தெருவில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் 1ம்தேதி (நாளை) தொடங்குகிறது. இந்திய விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உலகளாவிய கால்நடை சேவை இந்தியா அமைப்பின் சார்பில் நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

கடந்த ஆண்டு ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் நாய்களுக்கு ரேப்பீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 5 ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்களும் தங்களது நாய்களை கொண்டு வந்து ரேபிஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம். நாளை தொடங்கவுள்ள இந்த பணிகள் 13ம்தேதி வரை ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவுள்ளது.

 


Page 41 of 519