Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் நவீன கழிப்பிடம் திறப்பு

Print PDF

தினமணி 05.01.2010

காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் நவீன கழிப்பிடம் திறப்பு

காரைக்குடி,ஜன. 4: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் நகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்ட நவீன கழிப்பிடக் கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்

பொறியாளர் மணி, உதவிப் பொறியாளர் வேலுச்சாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:43
 

கடையநல்லூரில் பூச்சியியல் துறையினர் ஆய்வு

Print PDF

தினமணி 05.01.2010

கடையநல்லூரில் பூச்சியியல் துறையினர் ஆய்வு

கடையநல்லூர், ஜன. 4: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை பூச்சியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு கொசு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காய்ச்சலால் பலர் உயிரிழந்ததாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே கடையநல்லூரில் இறந்தவர்கள் காய்ச்சல் காரணமாக இறக்கவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை மாநில முதன்மை பூச்சியியல் அலுவலர் கதிரேசன், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் அப்துல்காதர், மண்டல பூச்சியியல் அலுவலர் செல்வராஜ், மாவட்ட மலேரியா அலுவலர் மோகன் உள்ளிட்டோர் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், பேட்டை, முத்துக்கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கொசு மாதிரிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனைகளில் நெருக்கடிகடையநல்லூர் பகுதியிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் இட நெருக்கடி காணப்பட்டது.

Last Updated on Tuesday, 05 January 2010 10:31
 

கொசுவை ஒழிக்க ராணுவ ஆராய்ச்சி மையம் புதிய யுக்தி கண்டுபிடிப்பு

Print PDF

தினமலர் 05.01.2010

கொசுவை ஒழிக்க ராணுவ ஆராய்ச்சி மையம் புதிய யுக்தி கண்டுபிடிப்பு

General India news in detail

 

 

 

 

 

 

 

பெங்களூரு : பெருகி வரும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளது.

கொசுவால் மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகின்றன. கொசுவை ஒழிக்க ஏராமான முறைகள் கையாளப்படுகின்றன. இருப்பினும், முற்றிலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை.குவாலியர் நகரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெண் கொசுவை வசீகரிக்கும் "பெரோமோன்' என்ற ஹார்மோனின் ரசாயன பொருளை கண்டுபிடித்துள்ளது. நீர்நிலைகளில் லார்வா வெளியிடும் பெராமோன் ஹார்மோன் வாசனையால் கவரப்படும் பெண் கொசுக்கள் அங்கு ஏராளமான முட்டைகளை இடுகின்றன.

இதைத் தெரிந்து கொண்ட ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், பெரோமோன் ஹார்மோன் ரசாயன மூலக்கூறு அடங்கிய திரவத்தை தயாரித்துள்ளனர். இதை ஒரு நீர்நிலையில் தெளிக்கும் போது அந்த இடத்தில் பெண் கொசுக்கள் படையெடுக்கும், ஆயிரக்கணக்கில் முட்டைகளை இடும். அந்த சமயம் பார்த்து பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்தால், ஒரே இடத்தில் கொசுக்களை அழித்து விடமுடியும், என கண்டறிந்துள்ளனர்.இந்தத் தொழில் நுட்பம் நான்கு தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு மருந்து தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் சோதனை ரீதியாக இந்த பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டு, திருப்தி அளித்துள்ளதால், மற்ற மாநிலங்களிலும் இந்த மருந்தை பயன்படுத்தும் படி மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.இந்த மருந்தின் தொழில் நுட்பத்தை, அமெரிக்காவும் பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

Last Updated on Tuesday, 05 January 2010 08:01
 


Page 404 of 519