Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரத்துறை அதிகாரிகள் மளிகை கடைகளில் ஆய்வு

Print PDF

தினகரன் 31.12.2009

சுகாதாரத்துறை அதிகாரிகள் மளிகை கடைகளில் ஆய்வு

அறந்தாங்கி, : அறந்தாங்கி பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் மசாலா உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

அறந்தாங்கி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன் உத்தரவின்பேரில் நாகுடி வட்டார மருத்துவ அலுவலர் அருள்நம்பி தலைமையில் வட்டார உணவு ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். ரத்தினக்கோட்டை, எட்டியதளி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், விஜயபுரம், நாகுடி, கருங்குடிகாடு, பெருங்காடு மற்றும் வெட்டிவயல் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லிதூள், மசாலா உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளதா என ஆய்வு செய்தனர். பாக்கெட்டுகளில் உள்ள பொருட்களின் தயாரிப்பு தேதி, முகவரி, தயாரிப்பாளர்கள் முகவரிகளை சோதனை செய்தனர். தயாரிப்பு தேதி, முகவரி இல்லாத உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகவரி இல்லாத பொருட்களை விற்பனை செய்தால் உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Last Updated on Thursday, 31 December 2009 06:15
 
பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்

Print PDF

தினமணி 31.12.2009

பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்

விழுப்புரம், டிச. 29: விழுப்புரத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

÷விழுப்புரம் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் தலைமை தாங்கினார். பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கணேஷ்சக்திவேல் வலியுறுத்தினார். சாலைகள் தோண்டப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளதாக பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். அப்போது நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்றார்.

÷மற்றொரு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் பாபு கொசு மருந்து அடிக்கும் பணியை சரி வர செய்ய வேண்டும் என்றார். சிலர் சாலையில் விளக்குகள் சரி வர எரிவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். அப்போது நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் குறுக்கிட்டு எரியும் அனைத்து விளக்குகளையும் விட்டுவிட்டு எரியாத இரு விளக்குகளை பற்றி பேசுகிறீர்களே என்றார். அவைகளும் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

Last Updated on Wednesday, 30 December 2009 10:34
 
சுகாதாரத்துறை அதிகாரிகள் மளிகை கடைகளில் ஆய்வு

Print PDF

தினகரன் 30.12.2009

சுகாதாரத்துறை அதிகாரிகள் மளிகை கடைகளில் ஆய்வு

அறந்தாங்கி, : அறந்தாங்கி பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் மசாலா உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

அறந்தாங்கி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன் உத்தரவின்பேரில் நாகுடி வட்டார மருத்துவ அலுவலர் அருள்நம்பி தலைமையில் வட்டார உணவு ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். ரத்தினக்கோட்டை, எட்டியதளி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், விஜயபுரம், நாகுடி, கருங்குடிகாடு, பெருங்காடு மற்றும் வெட்டிவயல் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லிதூள், மசாலா உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளதா என ஆய்வு செய்தனர். பாக்கெட்டுகளில் உள்ள பொருட்களின் தயாரிப்பு தேதி, முகவரி, தயாரிப்பாளர்கள் முகவரிகளை சோதனை செய்தனர். தயாரிப்பு தேதி, முகவரி இல்லாத உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகவரி இல்லாத பொருட்களை விற்பனை செய்தால் உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Last Updated on Wednesday, 30 December 2009 07:24
 
Page 408 of 519