Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதார வளாகம் திறப்பு

Print PDF

தினமலர் 29.12.2009

சுகாதார வளாகம் திறப்பு

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சி 9வது வார்டில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாக திறப்பு விழா நடந்தது. பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக 12 கழிவறை ட்டப்பட்டுள்ளன. அதற்கான திறப்பு விழா நடந்தது. நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தலைமை வகித்தார். கவுன்சிலர் பூபதி வரவேற்றார். சேர்மன் குமார் புதிய சுகாதார வளாகத்தை திறந்து வைத்து பேசினார். நகராட்சி துணை சேர்மன் ரவிச்ந்திரன், பி.எஸ்.எல்., ஆலோசனை குழு உறுப்பினர் நடனசபாபதி, கவுன்சிலர்கள் மீன்செல்வன், சுமதி உட்பட பலர் பங்கேற்னர்.

Last Updated on Tuesday, 29 December 2009 09:36
 

சுகாதாரப்பணிகளுக்கு ஒத்துழைப்பு : நகராட்சி நிர்வாக அலுவலர் கோரிக்கை

Print PDF

தினமலர் 29.12.2009

சுகாதாரப்பணிகளுக்கு ஒத்துழைப்பு : நகராட்சி நிர்வாக அலுவலர் கோரிக்கை

அரியலூர்: "சுகாதார பணிகளுக்கு வணிக நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்' என கோரிக்கை விடப்பட்டுள்ளது.இதுபற்றி அரியலூர் நகராட்சி நிர்வாக அலுவலர் சமயச்சந்திரன் வெளியிட்ட கோரிக்கை: அரியலூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்டம், 2005 செப்டம்பர் 5ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண் மற்றும் கையாளுதல் சட்டம் 2000ஐ பின்பற்றி, செயல்படுத்தப்பட்டு வரும் இச்சட்டத்தின்கீழ், அரியலூர் நகரை குப்பையில்லாத நகரமாக மாற்ற தேவையான முனைப்பான நடவடிக்கைகளை, நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அரியலூர் நகரத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நகரின் பல்வேறு இடங்களிலும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்பதற்காக, பச்சை மற்றும் சிகப்பு வண்ணத்தில் குப்பை தொட்டிகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது எனவே, கடைவீதியில் உள்ள வியாபார நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் உதவியாளர்கள், தங்களது கடைகளில் சேகரம் செய்யப்படும் குப்பைகளை, ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள சிகப்பு மற்றும் பச்சை நிற தொட்டிகளில் சேகரித்து, மறுநாள் காலையில், குப்பை வண்டிகளில் சேர்க்க வேண்டியது வணிக நிறுவனங்களின் கடமையாகும். பச்சை மற்றும் சிகப்பு குப்பை கூடைகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கடைகளில் வைத்து பராமரிக்க வேண்டும் என்பது அவசியாகிறது. இதுபற்றிய அறிவிப்பு, நகராட்சி சார்பில் சம்பந்தபட்ட கடை உரிமையாளர்களுக்கு 2009 நவம்பர் 13 முதல், டிசம்பர் 12ம் தேதி வரை, அறிவிப்பு சார்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் நகராட்சியிலுள்ள கடை உரிமையாளர் அனைரும், பச்சை மற்றும் சிகப்பு நிற குப்பை கூடைகளை பராரித்து, செயல்படும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை பின்பற்றாத உரிமையாளர்களின் கடை உரிமம் ரத்து செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 29 December 2009 09:23
 

மாட்டிறைச்சிகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 26.12.2009

மாட்டிறைச்சிகள் பறிமுதல்

போடி நகராட்சி காலனி பகுதியில் சுகாதாரகேடு ஏற்படும் வகையில் திறந்த வெளியில் விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சிகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

போடி நகராட்சி காலனியின் பின்புறப்பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் வகையில் திறந்த வெளியில் மாட்டிறைச்சி கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இப்பகுதியில் சோதனை நடத்திய சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான அலுவலர்கள் மாட்டிறைச்சிகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில்; நகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படும் வகையில் திறந்தவெளியில் ஆடு, மீன்,கோழி போன்ற இறைச்சிகள் விற்பனை செய்பவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். டி : போ

 


Page 409 of 519