Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஈ, கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிப்பு

Print PDF

தினமணி 24.12.2009

, கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிப்பு

திருப்பூர்,டிச.23: திருப்பூர் 15 வேலம்பாளையம் நகராட்சியில் ஈ மற்றும் கொசுக்களை ஒழிக்க புதிய மருந்து அடிக்கப்படுகிறது. மாவட்டத்திலேயே முதன்முறையாக இங்கு இப்பணி மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

திருப்பூர் மாநகரில் பனியன் கம்பெனி அதிகளவில் உள்ளதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல், சாலையில் குப்பைகள் தேக்கம் அதிகம் உள்ளது.

சாலையில் தேங்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதை கருத்திற்கொண்டு 15 வேலம்பாளையம் நகராட்சியில் இ.எம் 1 என்ற திறன்மிகு நுண்ணிய கலவை மூலம் ஈ மற்றும் கொசு துர்நாற்றம் போக்கும் மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன.

தயாரிக்கும் முறை: 1 லிட்டர் இ.எம் மருந்து (லிட்டர் விலை ரூ.350), 20 லிட்டர் குளோரின் கலக்காத நீர், 1 கிலோ கருப்பட்டி இந்த மூன்றையும் கலந்துகொண்ட பின் தொடர்ந்து 7 நாட்களுக்கு பிளாஸ்டிக் கேனில் மூடி வைக்க வேண்டும், பிறகு இதிலுள்ள மருந்தில் ஒரு லிட்டர் எடுத்து 50 லிட்டர் தண்ணீரில் கலந்து குப்பையின் மீது தெளிக்க வேண்டும்.

மருந்து அடிப்பதின் பயன்கள்: மருந்து தெளித்த ஒரு வாரத்தில் ஈ, கொசு வராமல் தடுத்துவிடும். மேலும் துர்நாற்றம் முழுவதும் வராது. தேங்கியுள்ள குப்பை மக்கி 3 ல் ஒரு பங்காக குறைந்துவிடும்.

Last Updated on Thursday, 24 December 2009 10:27
 

ரூ.50 ஆயிரம் மதிப்பு காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 24.12.2009

ரூ.50 ஆயிரம் மதிப்பு காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், டிச. 23: நாமக்கல்லில் புதன்கிழமை நடந்த சோதனையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன.

÷நாமக்கல்லில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் பல மாதங்களாக வைத்திருந்து விற்பனை செய்வதாகவும், இதனால் நுகர்வோருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதன்பேரில், திடீர் சோதனை நடத்துமாறு மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரனுக்கு ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டார். ரவீந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள சூப்பர் மார்ர்கெட் ஸ்டோரில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமலும், காவாவதி தேதி முடிந்த பிறகும் பல்வேறு உணவு பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. அவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம். ÷இதேபோல், பரமத்தி சாலையில் நடந்த சோதனையின்போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிடப்பட்டது.

அதில், உற்பத்தி தேதியில்லாமல் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிஸ்கட், ரொட்டி, கேக் மற்றும் பல்வேறு வகையான உணவு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள அந்த உணவு பொருட்கள் மற்றும் வேனையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

÷இதுபோன்று தொடர்ந்து சோதனைகள் நடைபெறும் எனவும் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது

Last Updated on Thursday, 24 December 2009 10:24
 

அவஸ்தை : பாதாள சாக்கடை பணி முடிய மூன்று மாதமாகும் : திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் லட்சுமி உறுதி

Print PDF

தினமலர் 24.12.2009

அவஸ்தை : பாதாள சாக்கடை பணி முடிய மூன்று மாதமாகும் : திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் லட்சுமி உறுதி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி 2010 மார்ச்சுக்குள் முடியும். அதன் பின்னரே அத் தனை ரோடுகளும் சீரமைக்கப்படும் என நகராட்சி கமிஷனர் லட்சுமி உறுதியளித்துள்ளார். திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி தொடங்கியதில் இருந்தே ரோடுகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு, தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள் ளது. நகரில் போக்குவரத்து என்பது சிரமமான விஷயமாக மாறி விட்டது.பஜார் பகுதியில் வியாபாரத்தில் பெரிய அளவில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் லட்சுமி கூறியதாவது: திண்டுக்கல் லில் பாதாள சாக்கடை பணி 23.76 கோடி ரூபாய் செலவில் 22 வார்டுகளில் நடந்து வருகிறது. 10 வார்டுகளுக்கான பணிகள் 2007ம் ஆண்டு அக்., 4ம்தேதி "விஸ்வா இன்ப்ரா ஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

12 வார்டுகளில் "கிர்லோஸ்கர் கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட்' என்ற நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. கடந்த 2008 மார்ச்சில் இருந்து பணிகள் தொடங்கின. மழை, நிலத்தடியில் உள்ள பாறைகள், நிலத்தடி நீர், திருவிழாக்கள் போன்ற காரணங்களால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. மின் தடை காரணமாக பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது.

வேறு மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் பாதாள சாக்கடை பணிக்கு வந்த பணியாளர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. இத்தனை தடைகளுக்கும் இடை யே 80 சதவீத பணிகள் முடிந்துள் ளன. 2010 மார்ச்சில் இப்பணிகள் அனைத்தும் முடிந்து விடும்.

ஒவ்வொரு தெருக்களிலும் பணி தொடங்கும் முன்னர் அறிவிப்பு செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பணிகளின் தரம் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர்,கலெக்டர், உலக வங்கிக்குழு, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இத்திட்டப் பணிகளை விரைவுபடுத்த கூடுதல் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

குழாய்கள் பதிக்க தோண்டப் பட்ட பள்ளங்களை பணிகள் முடிந்த உடனே மூட உத்தரவிடப் பட்டுள்ளது.மேடு பள்ளமான ரோடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்த உடன் அத்தனை ரோடுகளும் சீரமைக்கப்படும். எனவே பணிகளை முடிக்க ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 24 December 2009 09:48
 


Page 411 of 519