Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கடலூரில் மளிகை, இனிப்பு கடைகளில் நகராட்சி ஆணையாளர் சோதனை

Print PDF

தினமலர் 18.12.2009

 

மளிகை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி 18.12.2009

மளிகை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு

திருவள்ளூர்
, டிச. 17: திருவள்ளூர் அருகே உள்ள மளிகைக் கடைகளில் பொருள்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகளை சுகாதார ஆய்வாளர்கள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

÷திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அருள்செல்வி, பர்வீன் ஆகியோரின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகதாஸ், காண்டீபன், உணவு ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், சேகர் ஆகியோர் மணவாள நகரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். ÷

சமையல் பொருள்களான மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் அனைத்து பொருள்களின் தரம் மற்றும் உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

÷மேலும் கடையில் உள்ள பொருள்களை சுகாதாரமாகவும், பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும் கடம்பத்தூர் ஒன்றியம் முழுவதும் ஆய்வு தொடரும் என டாக்டர் அருள்செல்வி தெரிவித்தார்.

Last Updated on Friday, 18 December 2009 06:46
 

காலாவதியான மளிகைப் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 18.12.2009

காலாவதியான மளிகைப் பொருள்கள் பறிமுதல்

அரூர், டிச.17: அரூர் நகரில் உள்ள பல் பொருள் அங்காடிகளில் காலாவதியான பொருள்களை சுகாதாரத் துறை யினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட இடங்களில் சுகாதாரத் துறை யினர் வணிக நிறு வனங்கள், பல்பொருள் அங்காடிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தயாரிப்பு தேதி, பதிவு எண்கள் இல்லாத மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல கடத்தூர் பேரூராட்சி யிலும் காலாவதியான மளிகை பொருள்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சோதனையில் மருத்துவர் ராஜராஜன், செயல் அலுவலர் ஜெ.திருஞானம், துப்புரவு ஆய்வாளர்கள் ரவீந்திரன், சின்னமாரி, கணேசன், ராஜேந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் டி.லோகசுப்பிரமணியம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Last Updated on Friday, 18 December 2009 06:28
 


Page 419 of 519