Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருச்சியில் 75 பன்றிகளை பிடித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது

Print PDF

தினமலர்              22.08.2013

திருச்சியில் 75 பன்றிகளை பிடித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது

திருச்சி: திருச்சி அரியமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த 75 பன்றிகளை ஒரே நாளில் பிடித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி மாநகர பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி உத்தரவிட்டார். மாநகரில் பன்றிகளை பிடித்துக் கொண்டு செல்ல ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து திருச்சி அரியமங்கலம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடிக்க, மாநகராட்சி நகர் நல அலுவலர் அல்லி தலைமையில், 5 சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில், போலீஸ் பாதுகாப்புடன் பன்றிகளை பிடிக்கும் பணி நேற்று நடந்தது.

மேல அம்பிகாபுரம், கீழ அம்பிகாபுரம், அண்ணா நகர், காவேரி நகர், ரயில்நகர், ராஜப்பா நகர், திடீர் நகர், பொன்முத்து நகர் பகுதிகளில் 20 பேர் குழுவினரால் 75 பன்றிகள் பிடிக்கப்பட்டது.

இதேபோல், "மாநகரில் பன்றி வளர்ப்பவர்கள், தங்களது பன்றிகளை மாநகரை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்' என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆம்பூரில் தீவிர கொசு ஒழிப்புப் பணி

Print PDF

தினமணி           14.08.2013

ஆம்பூரில் தீவிர கொசு ஒழிப்புப் பணி

ஆம்பூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள நீர் ஆகியவற்றை அப்புறப்படுத்துகின்றனர். தண்ணீர் சேமித்து வைக்கப்படும் மேல்நிலை, தரைமட்ட தண்ணீர்த் தொட்டிகளில் அபேட் மருந்துக் கரைசல் ஊற்றப்படுகிறது.  தண்ணீர் சேமித்து வைக்கப் பயன்படும் கலன்கள், தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை கழுவ வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.

மேலும் புகைப்போக்கி இயந்திரம் மூலம் புகை மருந்து நகரம் முழுவதும் அடிக்கப்படுகிறது. கழிவுநீர் கால்வாய்களில் ஸ்பிரே மூலம் கொசு மருந்து அடிக்கப்படுகிறது.

இப்பணிகளை ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கர், இளநிலை பூச்சியில் வல்லுநர் எஸ். சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

 

நகராட்சியில் பன்றி வேட்டை

Print PDF

தினகரன்            08.08.2013

நகராட்சியில் பன்றி வேட்டை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து அடிக்கடி புகார் எழுந்தது. இதையடுத்து நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரில் நகராட்சி ஆனையாளர் சுந்தராம்பாள் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான டீச்சர்ஸ் காலனி, பொட்டுமேடு, மரப்பேட்டை வீதி, ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்றனர், அப்போது நகர் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் சுற்றித்திரிந்த 17 பன்றிகளை நகராட்சி பணியாளர்கள் உதவியோடு பிடித்து நகரின் எல்லைபகுதியில் கொண்டு சென்று அப்புறப்படுத்தனர்.

பன்றிகளை நகர் பகுதியில் இருந்து 0.5 கிமீ தூரத்தில் வளர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் வர விடக்கூடாது, பன்றிகளை பட்டியில் தான் வளர்க்க வேண்டும். பட்டியில் மாதம் ஒருமுறை கிருமி நாசினி மருந்தை அடிக்க வேண்டும். பன்றி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் பன்றி வளர்ப்பில் ஈடுபடுவோர்களுக்கு விதித்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்தாலோ, நகர் பகுதியில் வளர்த்தாலோ பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 


Page 43 of 519