Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

1,536 சிறார்களுக்கு போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினமணி 14.12.2009

1,536 சிறார்களுக்கு போலியோ சொட்டு மருந்து

வேலூர்,டிச. 13: வேலூர் மாவட்டத்தில் 1,536 சிறார்களுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது.

தாற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளவர்கள் மற்றும் அகதிகளின் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு நவம்பர் 15}ம் தேதி, முதல் தவணையாக சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. 2}ம் தவணை சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கிராமப் புறங்களில் 91 இடங்களிலும், நகர்ப்புறங்களில் 37 இடங்களிலும், 6 அகதிகள் முகாம்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில், 59 இலங்கை அகதிகள் குழந்தைகள் உள்பட 608 சிறார்களுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டன. திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் 928 சிறார்களுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டன.

 

ஈரோடு: 27-ல் தூய்மைப் பணியாளர்கள் மாநாடு, பேரணி

Print PDF

தினமணி 14.12.2009

ஈரோடு: 27-ல் தூய்மைப் பணியாளர்கள் மாநாடு, பேரணி

ஈரோடு, டிச.13: ஈரோடு மாநகரில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் மாநாடு, பேரணி வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.

மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்கள், பஸ் நிலையம், மார்க்கெட், அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குயிருப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் ஈரோடு பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறும் இம்மாநாட்டுக்கு, ஈரோடு மாநகர தூய்மைப் பணியாளர்கள் சங்க (யுஎஃப்டியு) மாநிலப் பொதுச்செயலர் ஈவிகே.சண்முகம் தலைமை வகிக்கிறார்.

ஐக்கிய தொழிற்சங்க சம்மேளன மாநிலச் செயலர் ஆர்.கணேஷ், நிர்வாகிகள் எம்.மாரப்பகவுண்டர், எம்.கே.முஸ்தபா, மாவட்டச் செயலர் எஸ்.குருராஜ், மாநகரத் தலைவர் என்.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி பேரணி, கொடியேற்றுதல், தீர்மானங்கள் நிறைவேற்றம், நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

குறைந்தபட்ச கூலி வழங்குதல், 6 மணி நேர வேலை, ஒப்பந்த அடிப்படையில் உழைப்பைச் சுரண்டுவதைத் தடுத்தல், சமவேலைக்கு சம ஊதியம், 480 நாள்கள் பணிமுடித்தவர்களை நிரந்தரப்படுத்தல், மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரத் தொழிலாளர்களை நியமிக்க ரூ.2 லட்சம் வரை வசூல் செய்வதைத் தடுத்தல், இலவச வீட்டுமனை, பட்டா, பிரசவ விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Last Updated on Monday, 14 December 2009 06:37
 

விழிப்புணர்வு பிரசாரப் பேரணி

Print PDF

தினமணி 14.12.2009

விழிப்புணர்வு பிரசாரப் பேரணி

திருவாடானை,டிச. 13: திருவாடானை தாலுகா தொண்டியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரப் பேரணி நடைபெற்றது,

தொண்டி பேருராட்சித் தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். தொண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, தொண்டி அரசு மருத்துவமனையை வந்தடைந்தது பேரணி. பின்னர் தொண்டி வட்டார மருத்துவ அலுவலர் துரைசாமி, தொழுநோய் விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 424 of 519