Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சாக்கடையை மூடி கட்டப்பட்ட கழிப்பறைகள் அகற்றம்

Print PDF

தினமணி 09.12.2009

சாக்கடையை மூடி கட்டப்பட்ட கழிப்பறைகள் அகற்றம்

பவானி, டிச, 8: குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் சாக்கடையை மூடி கட்டப்பட்டிருந்த கழிப்பறைகளை நகராட்சிப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை இடித்து தள்ளினர்.

சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டாமல் மனிதக் கழிவுகளை நேரடியாக சாக்கடையில் திறந்து விடக்கூடாது என தெரிவிóத்திருந்தது.

ஆயினும், பல்வேறு பகுதிகளில் சாக்கடைகளில் கழிவுகள் திறந்து விடப்பட்டு வந்தன.

இந்நிலையில், காளியம்மன் கோயில் வீதியில் செப்டிக் டேங்க் இல்லாத வீடுகளை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டேங்க் இல்லாமல் கழிவறைகளிலிருந்து நேரடியாக சாக்கடைக்கு செல்லும் வகரையில் வைக்கப்பட்டிருந்த குழாய்கள் துண்டிக்கப்பட்டு சிமெண்ட் கலவை கொண்டு அடைக்கப்பட்டன.

மேலும், சாக்கடை மீதே கட்டப்பட்டிருந்த கழிவறைகளும் இடித்துத் தள்ளப்பட்டன.

இந்நடவடிக்கையில், குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வே.மணிக்கவாசகம் தலைமையில் பொறியாளர் ரவி, சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

 

கூவம் ஆறு சீரமைப்பு 10 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

Print PDF

தினமணி 09.12.2009

கூவம் ஆறு சீரமைப்பு 10 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

சென்னை, டிச. 8: ""சென்னையில் கூவம் ஆற்றைச் சீரமைக்கும் திட்டத்தை 10 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை புதுப்பேட்டையில் உள்ள லாங்க்ஸ் கார்டன் சாலையில் கூவம் ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த 980 மீட்டர் நீளமுள்ள இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கூவம் ஆற்றை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக, இந்த இடத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, மாநகராட்சி வசம் இந்த இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூவம் ஆற்றைச் சீரமைக்கும் பணிகள் குறித்த ஆய்வை லாங்க்ஸ் கார்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார் துணை முதல்வர் மு..ஸ்டாலின்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

""கூவத்தைப் போன்று சிங்கப்பூரில் ஓடிய 10 கி.மீ., நீளமுள்ள ஆற்றை சீரமைக்க சுமார் 10 ஆண்டுகள் ஆயின. சென்னையில் ஓடும் கூவம் ஆற்றின் நீளம் 18 கி.மீ. ஆகும். சீரமைப்புத் திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் ஆறு 54 கி.மீ., நீளம் ஓடுகிறது. இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து கூவம் ஆற்றின் நீளம் 72 கி.மீ. ஆகும்.

நிர்வாகக் குழு... கூவம் ஆற்றைச் சீரமைக்க முதலில், அதைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்காக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வருகிறது.

கூவம் சீரமைப்புப் பணி என்பது பல்வேறு துறைகளும் இணைந்து செய்ய வேண்டியதாகும். பொதுப்பணி, உள்ளாட்சி, சென்னை குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து இப் பணிகளை மேற்கொள்ளும்.

இந்தப் பணிகளைச் செய்வதற்கு தலைமைச் செயலாளர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்படும். மேலும், பல்வேறு துறைகள் இணைவதால் அவற்றை ஒருங்கிணைக்க தனியாக ஒருங்கிணைப்புக் குழுவும் ஏற்படுத்தப்படும்.

10 ஆயிரம் ஆக்கிரமிப்புகள்... கூவம் ஆறு சீரமைப்பின் முதல் கட்டப் பணிகளுக்கு ரூ.1200 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கூவம் ஆறு சென்னை, திருவள்ளூர் என இரண்டு மாவட்டங்களையும் கடக்கிறது. இரு மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்றவை வருகின்றன. எனவே, உள்ளாட்சி பகுதிகளில் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் புதிதாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே உள்ள பாதாள சாக்கடைத் திட்டங்கள் ரூ.117 கோடியிலும், ஆற்றின் கரைப் பகுதிகள் ரூ.200 கோடியிலும் மேம்படுத்தப்படும்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான நிதி ஆதாரங்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

சென்னையில் உள்ள நீர்வழிப் பகுதிகளில் முதலில் கூவம் ஆறு சீரமைக்கப்படும். இதைத் தொடர்ந்து, பிற ஆறுகளை சீரமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கூவம் ஆற்றில் கலக்கிறது. இதனால், கூவம் மேலும் அசுத்தமாகிறது. இதனால், கூவத்தைப் போல மற்ற ஆறுகளையும் சுத்தம் செய்வது அவசியம்'' என்றார் துணை முதல்வர் மு..ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை செயலாளர் ராமசுந்தரம், துணை முதல்வரின் செயலாளர் தீனபந்து உள்ளிட்ட பலர் கலந்து கொùண்டனர்.

 

திருப்பத்தூர் கடை, ஓட்டல்களில் சுகாதாரதுறையினர் ஆய்வு

Print PDF

தினமலர் 08.12.2009

 


Page 426 of 519