Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காய்ச்சல்: 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

Print PDF

தினமணி 0 7.12.2009

காய்ச்சல்: 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி, டிச. 6: திருச்சி மாநகரில் மழை காரணமாக காய்ச்சல் தொற்று இருப்பதாக அறியப்பட்ட 3 இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 970 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சியில் அண்மையில் பெய்த மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும், கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், புகை மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, உறையூர் கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், சிந்தாமணி பூசாரித் தெரு சத்துணவுக் கூடம், எடமலைப்பட்டிபுதூர் நகர்நல மையம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் தலைமையில் மருத்துவர்கள் குழு பங்கேற்று, மொத்தம் 970 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டது. தொடர்ந்து வரும் புதன்கிழமை கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமிலும் இந்த மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.

Last Updated on Monday, 07 December 2009 07:27
 

ஹோட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டுகோள்

Print PDF

தினமணி 04.12.2009

ஹோட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டுகோள்

சிதம்பரம், டிச. 3: கடலூர் மாவட்டத்தில் பரவிவரும் விஷக்காய்ச்சலை தடுக்கும் பொருட்டு அனைத்து ஹோட்டல்களிலும் பொதுமக்களுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

÷இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டத்தில் விஷக் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அனைவருக்கும் பரவிவிடுகிறது. காய்ச்சல் வந்து போன பிறகு மூட்டுவலி ஏற்பட்டு அந்த வலிபோக பல மாதங்கள் ஆகிறது. எனவே காய்ச்சிய குடிநீரை பொதுமக்கள் அனைவரும் பருக சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், திரையரங்குகள், டீக்கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சி குடிநீரை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சி.டி.அப்பாவு தெரிவித்துள்ளார்.

 

அவ்வை நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியை முடிக்க உத்தரவு

Print PDF

தினமணி 04.12.2009

அவ்வை நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியை முடிக்க உத்தரவு

புதுச்சேரி. டிச.3: புதுச்சேரி அவ்வை நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சரும் இத் தொகுயின் எம்எல்ஏவுமான ஷாஜகான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதல் கட்டமாக அவ்வை நகர் முதலாவது, 2-வது, 4-வது மெயின் ரோட்டில் இப் பணிகளைச் சீர் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வை நகர் நல்வாழ்வு சங்கத் தலைவர் சேஷாத்திரி அமைச்சரிடம் இப் பிரச்னை குறித்து மனு கொடுத்தார்.

அதன் அடிப்படையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சேஷாத்திரி தெரிவித்துள்ளார்.

 


Page 427 of 519