Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கோவை மாநகராட்சியில் கூடுதலாக குப்பை கூடை வாங்க திட்டம்

Print PDF

தினகரன் 02.12.2009

 

விவரங்களின்றி உணவுப் பொருள்கள் விற்றால் நடவடிக்கை

Print PDF

தினமணி 2.12.2009

விவரங்களின்றி உணவுப் பொருள்கள் விற்றால் நடவடிக்கை

திருவாரூர், டிச. 1: திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போதிய விவரங்கள் இல்லாமல் உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் க. சரவணன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பெரிய மளிகைக் கடைகளில் சுகாதார அலுவலர், உணவு ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கொண்ட சுகாதாரக் ழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பெரும்பாலான கடைகளில் பாலிதீன் பைகளில் உணவுப் பொருள்கள் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பாலிதீன் பைகளில் உணவுப் பொருள்கள் குறித்து போதிய விவரங்கள் இல்லாமல் உள்ளன. மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் அந்நாட்டு

மொழிகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் உணவுக் கலப்படத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால் அச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனையை இதற்கும் வழங்கப்படும். எனவே, உணவுப் பொருள்களின் பெயர், மொத்த அளவு, கலக்கப்பட்ட மூலப் பொருள்களின் அளவு, தயாரிக்கப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட இடத்தின் முகவரி மற்றும் தேதி, காலாவதியாகும் தேதி, சைவம் மற்றும் அசைவத்தைக் குறிக்கும் அடையாளக் குறியீடுகள் உள்ளிட்ட விவரங்களுடன் விற்பனை செய்ய வேண்டும். இத்தகைய விவரங்கள் ஏதுமின்றி பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையாளர்கள் மீது உணவுக் கலப்படத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி ஆணையர் சரவணன் எச்சரித்துள்ளார்.

 

நகரில் பன்றி வளர்க்க தடை: ஆணையர்

Print PDF

தினமணி 2.12.2009

நகரில் பன்றி வளர்க்க தடை: ஆணையர்

மதுரை, டிச.1: மதுரை மாநகரில் பன்றி வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகரில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இதைக் கருத்தில்கொண்டு, நகரில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்படுகிறது. மதுரை நகரில் பன்றிகளை வளர்ப்போர் 48 மணி நேரத்துக்குள் மாநகராட்சி எல்லைக்கு அப்பால் பன்றிகளை கொண்டு செல்லுமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பன்றிகளை அப்புறப்படுத்தாவிடில், மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித்திரியும் பன்றிகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் பன்றி ஒன்றுக்கு அபராதத் தொகையாக ரூ. 500 வீதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.

 


Page 429 of 519