Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தரமற்ற கேரிபேக், கப்புகள் பறிமுதல்

Print PDF

தினமணி 25.11.2009

தரமற்ற கேரிபேக், கப்புகள் பறிமுதல்

பழனி, நவ. 24: பழனியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி இணைந்து தரமற்ற கேரிபேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பழனி காந்தி மார்க்கெட், திண்டுக்கல் ரோடு, பஸ் நிலையம், அடிவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த 200க்கும் மேற்பட்ட பெரிய கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், பொறியாளர் அசோகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அபுதாகீர், அனீபா, நெடுமாறன், மதுரைவீரன் உள்ளிட்ட பலர் ஆய்வில் கலந்து கொண்டனர். 20 மைக்ரானுக்கு கீழே உள்ள கேரிபேக்குகள், 50 பைகள் கொண்ட 105 கிராமிற்கு குறைவான எடையில் இருந்த கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 250 கிலோ எடையிலான இவை உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது.

Last Updated on Wednesday, 25 November 2009 06:33
 

பாதாள சாக்கடைக்கு பூமி பூஜை...

Print PDF

தினமணி 25.11.2009

பாதாள சாக்கடைக்கு பூமி பூஜை...

தாம்பரத்தில் ரூ.161 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார் தாம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. உடன் தாம்பரம் நகரமன்றத் தலைவர் இ.மணி, ஆணையர் பிரேமா.

Last Updated on Wednesday, 25 November 2009 06:27
 

ராஜவாய்க்கால் தூர் வாரும் பணி தீவிரம்

Print PDF

தினமலர் 24.11.2009

 


Page 433 of 519