Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

களம்பூரில் 3500 குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

Print PDF

தினமணி 23.11.2009

களம்பூரில் 3500 குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

திருவண்ணாமலை, நவ. 22: போளூர் தாலுகா களம்பூர் பேரூராட்சியில் 3,500 குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. 1 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.

களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் மகாலட்சுமி ராதாகிருஷஷ்ணன் தடுப்பூசி போடும் முகாமை தொடங்கினார். பேரூர் திமுக செயலர் கேடிஆர்.பழனி, கவுன்சிலர் ஜெயக்குமார், திமுக நிர்வாகிகள் ஆறுமுகம்,அண்ணாமலை கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 23 November 2009 06:54
 

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Print PDF

தினமணி 23.11.2009

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

பவானி, நவ. 22: பவானி நகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் 1250 பேருக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நகராட்சி கிழக்கு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை பவானி எம்எல்ஏ கே.வீ.ராமநாதன் தொடக்கி வைத்தார். ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் டி.மேனகா தலைமையில் மருத்துவக் குழுவினர் 1250 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 80 பேருக்கு ஈசிஜி, 21 பேருக்கு ஸ்கேன், 510 பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கர்ப்பபை நோய் பரிசோதனை 53 பேருக்கு செய்யப்பட்டது. இதயம் நோய் அறிகுறிகள் உள்ள 18 பேர் மேல்சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டது.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் கர்ப்பப்பை நோய் பரிசோதனையும், குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பல் நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சி ஆணையர் எஸ்.நெடுஞ்செழியன்,நகர்மன்றத் துணைத் தலைவர் என்.கிருஷ்ணராஜ், உறுப்பினர் கே.ஸ்ரீனிவாசன், சுகாதார ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Last Updated on Monday, 23 November 2009 06:46
 

தொற்று நோய் பாதிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவு

Print PDF

தினமணி 23.11.2009

தொற்று நோய் பாதிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவு

கோபி, நவ.22: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மழைக்காலத்தில் பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு ,வயிற்றுப்போக்கு, மலேரியா, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தகைய நோய்கள் பெரியவர்களை விட குழந்தைகளை அதிகமாக பாதிக்கும்.

நோய் பரவாமல் இருக்க பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளுதல், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் சாக்கடைகளில் கொசு மருந்து அடித்தல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, குடிநீரில் குளோரின் மருந்தை பயன்படுத்துதல், மழைக் காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்கவும், வீட்டில் உள்ள கொட்டாங்குச்சி, டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உரல்கள், பானைகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டிகளை காற்று புகாதவாறு மூடி வைக்கவும், செப்டிக் டேங்கின் மேல்பகுதியை வலையால் மூடவும் பொதுமக்களிடயே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளுமாறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 23 November 2009 06:44
 


Page 434 of 519