Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பு

Print PDF

தினமணி 19.11.2009

சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பு

சங்கரன்கோவில்
, நவ 18:÷சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து நகர்மன்றத் தலைவர் பார்வதிசங்கர் தலைமையில் வழங்கப்பட்டது.

÷சுகாதார அலுவலர் குருசாமி முன்னிலை வகித்தார். நகராட்சிப் பகுதியில் உள்ள 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ÷

ஆத்தியடிபிள்ளையார் கோயில் அருகேயுள்ள அகதிகள் முகாம்,உழவர் சந்தையில் உள்ள அகதிகள் முகாம் ஆகியவற்றில் உள்ள 63 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை நகர்மன்றத் தலைவர் பார்வதிசங்கர் வழங்கினார்.

÷ஏற்பாடுகளை நகராட்சித் துப்புரவு ஆய்வாளர்கள் ஜெயபால்மூர்த்தி, பாலச்சந்தர், வெங்கட்ராமன், சக்திவேல், மகப்பேறு உதவியாளர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Last Updated on Thursday, 19 November 2009 08:40
 

களக்காடு அருகே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 19.11.2009

களக்காடு அருகே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆய்வு

களக்காடு, நவ. 18: களக்காடு பகுதியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா முகைதீன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் இறந்த பிரீடா எலிசபெத் வீடு களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளையில் உள்ளது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா முகைதீன் உள்ளிட்ட சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மஞ்சுவிளை பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் நோய்த் தாக்குதல் குறித்து கேட்டறிந்தனர்.

Last Updated on Thursday, 19 November 2009 08:38
 

புஸ்தி தொகுதியில் குவிந்துள்ள குப்பைகள் அகற்றம்

Print PDF

தினமலர் 18.11.2009

 


Page 438 of 519