Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்புப் பேரணி

Print PDF

தினமணி              02.08.2013

பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்புப் பேரணி

பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருள்களை ஒழிக்கக் கோரியும், கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், புதன்கிழமை பேரணி நடைபெற்றது.

   நகராட்சி ஆணையர் ஆர். மகேஸ்வரி பேரணிக்கு தலைமை வகித்தார். இதில், பொறியாளர் வி. சுப்பிரமணியன் உள்பட நகராட்சிப் பணியாளர்கள், பாரத ஸ்டேட் வங்கிக் கிளை மேலாளர் ஜம்புலிங்கம், நகர் நலச்சங்கத் தலைவர் எம். அன்புக்கரசன், தொண்டு நிறுவன இயக்குநர்கள் பி. முருகன் (நேசம்), அக்னிவீரா (மகாகவி), நண்பர்கள் இலக்கிய வட்டச் செயலர் கவிஞர் கவிக்கருப்பையா, வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன், இப்பள்ளி என்.சி.சி. அலுவலர் மற்றும் மாணவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

   பேரணியானது, நகராட்சி அலுவலகம் முன்பாகத் தொடங்கி, தென்கரை, வடகரை ஆகிய பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. அப்போது, பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருள்களினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், இப்பொருள்களை முற்றிலும் ஒழிக்கும்பொருட்டு இவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும், பதாகைகளுடன் பேரணியில் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

  மேலும், கடைகளில் இப்பொருள்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஆணையர் ஆர். மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மாநகராட்சியில் 62 இடங்களில் ரூ8.82 கோடியில் நவீன கழிப்பிடம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு

Print PDF
தினகரன்             02.08.2013

மாநகராட்சியில் 62 இடங்களில் ரூ8.82 கோடியில் நவீன கழிப்பிடம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு


ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதியில் 62 இடங்களில் ரூ.8.82 கோடி மதிப்பீட்டில் நம்ம டாய்லெட் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மனித கழிவுகள் கழிக்கும் நிலையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழுதடைந்த கழிப்பிடங்கள் பராமரிப்பு செய்தும், புதிய கழிப்பிடங்கள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய நம்ம டாய்லெட் கட்டப்படவுள்ளது. மாநகராட்சி பகுதியில் 62 இடங்களில் 8 கோடியே 82 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட் டில் கட்டப்படவுள்ளது.

மாநகராட்சி 1வது மண்டலத்தில் காந்திநகர் பகுதியில 9 லட்ச ரூபாய் மதிப்பிலும், பெருமாள் மலை, மாயபுரம் ஆகிய பகுதிகளில் தலா 14.20 லட்ச ரூபாய் மதிப்பிலும், ராஜீவ்நகர் பகுதியில் 14.30 லட்ச ரூபாய் மதிப்பிலும், நீலிக்கரடு பகுதியில் 2 இடங்களில் தலா 14.20 லட்ச ரூபாய் மதிப்பிலும், தட்டாங்குட்டை பகுதியில் 24.90 லட்ச ரூபாய் மதிப்பிலும், கொத்துக்காரன்புதூரில் 14.30 லட்ச ரூபாய் மதிப்பிலும், வீரபண்ணாடிபுதூர் பகுதியில் 13.90 லட்ச ரூபாய் மதிப்பிலும் கட்டப்படவுள்ளது. அம்பேத்கார்நகர், காமராஜ்நகர்,, எம்.ஜி.ஆர்.நகர், நஞ்சப்பா நகர், வன்னியர்துறை பகுதி, அன்னை சத்யாநகர், நெசவாளர் காலனி, மல்லிநகர் ஓடைப்பகுதி, கிருஷ்ணம்பாளையம் என 1வது மண்டலத்தில் 28 இடங்களில் நம்ம டாய்லெட் திட்டத்தின்கீழ் கழிப்பிடங்கள் கட்டப்படவுள்ளது. 2வது மண்டலத்தில் குளத்துப்பாளையத்தில் 3 இடங்களிலும், ஆயப்பாளி, கந்தையன்தோட்டம் பகுதியில் 2 இடங்களிலும், சூளை பகுதியில் 2 இடங்களிலும், கே.என்.கே.ரோடு, மில்வீதி உள்ளிட்ட பகுதிகளில் 11 இடங்களில் கட்டப்படவுள்ளது.

3வது மண்டலத்தில் அண்ணாநகர், கைகாட்டி வலசு ஆகிய பகுதிகளில் தலா 2 இடங்களிலும், வீரப்பம்பாளையம், சூரம்பட்டிவலசு, ஜீவாசெட், பெரியார்நகர் ஆகிய இடங்களில் தலா 2 இடங்களிலும், கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 13 இடங்களில் நம்ம டாய்லெட் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 4வது மண்டலத்தில் புதுமைக்காலனி, குமரன்நகர், அண்ணாமலை பிள்ளை வீதி, நடராஜா தியேட்டர், சோலார் சுகந்திராபுரம், நீல்கிரீஸ் ஆகிய இடங்களில் 10 இடங்களிலும் புதியதாக நம்ம டாய்லெட் கட்டப்படவுள்ளது.

மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள இந்த நம்ம டாய்லெட் அமைப்பதற்கு அரசு மானியம் பெற நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக கட்டுமான பணிகள் முடிந்து 5 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனம் மூலமாக பராமரிக்க டெண்டர் விடவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம்: தாராபுரம் நகராட்சிக் கூட்டத்தில் தகவல்

Print PDF

தினமணி               01.08.2013 

கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம்:  தாராபுரம் நகராட்சிக் கூட்டத்தில் தகவல்

தாராபுரம் நகரில் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் கூடுதல் துப்புரவு பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளது என ஆணையர் க.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
  • மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவர் ஞா.கலாவதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் க. சரவணக்குமார், துணைத் தலைவர் எஸ். கோவிந்தாரஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

 கருப்புசாமி (அதிமுக): சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார பணிகளில் தேக்கநிலை காணப்படுகிறது.

 ஆணையாளர்: நகராட்சியில் புதிய துப்புரவுப் பணியாளர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் பட்டியல் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பெயர்கள் விடுபட்டோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

 நாகேஸ்வரன் (அதிமுக): நகராட்சிக்குள்பட்ட 4-வது வார்டு பகுதியில் இதுவரை எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

  • நகராட்சிக்கு சொந்தமான பல கடைகள் நீண்ட ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் சிலரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவதாக பல உறுப்பினர்கள் தெரிவித்தனர்.÷இதற்கு பதிலளித்த ஆணையர், கடைகள் மறு ஏலம் விடப்பட உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுவரொட்டி ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியோருக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க இயலாது என்றார்.
 


Page 45 of 519