Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன

Print PDF

தினமணி 12.11.2009

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன

சேலம், நவ.11: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.

சேலம் மாநகரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையில் போவோர் வருவோரை துரத்திக் கடிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, திருச்சி மெயின் ரோடு, குகை, சங்ககிரி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்கள் நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 25 நாய்கள் பிடிக்கப்பட்டன. இவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு ஒரு வாரத்தில் மீண்டும் பிடிக்கப்பட்ட இடங்களிலேயே விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பணியில் துப்புரவு ஆய்வாளர்களான சரவணன், சந்திரன், ஞானசேகரன், மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணி, முருகன் மற்றும் சுமார் 20 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Last Updated on Thursday, 12 November 2009 07:47
 

கும்மிடிப்பூண்டி நகராட்சியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை

Print PDF

தினமணி 12.11.2009

கும்மிடிப்பூண்டி நகராட்சியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை

கும்மிடிப்பூண்டி,நவ. 11: பலத்த மழை காரணமாக தொற்று நோய் பரவாமல் இருக்க கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செவ்வாய்க்கிழமை முதல் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக பெய்த அடை மழையின் காரணமாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தொற்று நோய் பரவாமல் இருக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கே.என்.பாஸ்கர் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார், துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன்படி பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீதிகளை சுத்தம் செய்து, தெருக்கள் மற்றும் கழிவுநீர் சாக்கடையில் கொசு மருந்து அடிக்க பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பஸ் நிலையம், ஜி.என்.டி.சாலை மற்றும் 15 வார்டுகளில் சுத்தம் செய்து, தெருக்கள் மற்றும் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

அதோடு பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து மக்களும் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை குடிக்கும்படி வீதிவீதியாக தண்டோரா போடப்பட்டது. அதே போல குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக பேரூராட்சி அலுவலகத்துக்கு தெரிவிக்கும்படி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Thursday, 12 November 2009 07:36
 

போடி பகுதியில் சுகாதாரக் கேட்டை தடுக்க தடுப்பு மருந்து

Print PDF

தினமணி 11.11.2009

போடி பகுதியில் சுகாதாரக் கேட்டை தடுக்க தடுப்பு மருந்து

போடி, நவ. 10: போடி பகுதியில் நகராட்சி சார்பில் மழையினால் சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

போடி பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் மழையினால் கொட்டகுடி ஆற்றிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் போடி நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகர் முழுவதிம் தண்ணீர் தேங்கி உள்ளதால் நகராட்சி வார்டுகள் முழுவதும் துப்புரவுப் பணியாளர்கள் கொசு ஒழிப்பு மருந்து, பினாயில் திரவம் தெளித்து வருகின்றனர்.

மேலும் புகையடித்தல் மூலம் கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கும் பணியும் நடை பெற்று வருகிறது. மேலும் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் கலங்கலாக இருப்பதால் தண்ணீரைக் காய்ச்சி குடிக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Last Updated on Wednesday, 11 November 2009 09:27
 


Page 447 of 519