Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குமரி மாவட்டத்தில் நவ.15, டிச. 13 தேதிகளில் சிறப்பு போலியோ முகாம்

Print PDF

தினமணி 07.11.2009

குமரி மாவட்டத்தில் நவ.15, டிச. 13 தேதிகளில் சிறப்பு போலியோ முகாம்

நாகர்கோவில், நவ. 6: கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்களுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நவ. 15, டிச. 13 தேதிகளில் நடக்கிறது.

இது தொடர்பாக நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பேசியதாவது:

2010 ஜனவரி 10 மற்றும் பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

கூடுதலாக வெளிமாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்வோருக்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நவ. 15 மற்றும் டிசம்பர் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள், மீன்பிடித்தல் தொழிலுக்காக இடம்பெயர்ந்து வந்தவர்கள், தோட்டங்களில் பணிபுரிவோர் போன்ற குடும்பங்களை சேர்ந்த 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளும் இச் சிறப்பு முகாம்கள் மூலம் பயன்பெறுவர்.

இது தொடர்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டதில் 724 குடும்பங்களைச் சேர்ந்த 2797 பேரில் 343 குழந்தைகள் 5 வயதுக்கு உள்பட்டவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) எம். மதுசூதனன், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மோகன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) ஷாகுல் ஹமீது, நாகர்கோவில் நகர் நல அலுவலர் போஸ்கோ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பொன்னேரி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிப்பு

Print PDF

தினமணி 07.11.2009

பொன்னேரி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிப்பு

பொன்னேரி, நவ. 6: பொன்னேரி பேரூராட்சியில் சாலையோரம் தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை பதம் பார்த்து வருவதாக கடந்த 3-ம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.

இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையம், ஹரிஹரன் பஜார், தேரடித் தெரு, புதிய பஸ் நிலையம், தாயுமான் செட்டி தெரு உள்ளிட்ட இடங்களில் புகை தெளிக்கும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு புகையை புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் தெளித்தனர். மீதமுள்ள தெருக்களிலும் வெள்ளிகிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் கொசு ஒழிப்பு புகையை தெளிக்கவுள்ளனர்.

 

பாதாள சாக்கடை அடைப்பு நீக்க 'ஜெட் ராடிங்க' இயந்திரம்

Print PDF

தினமலர் 06.11.2009

Last Updated on Friday, 06 November 2009 12:47
 


Page 455 of 519