Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பை அகற்ற புதிய ஒப்பந்தம்

Print PDF

தினமணி 5.11.2009

கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பை அகற்ற புதிய ஒப்பந்தம்

சென்னை, நவ. 4: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் அடுத்த 12 ஆண்டுகள் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி..) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கோயம்பேட்டில் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் காய், கனி, பூ மொத்த விற்பனை அங்காடிகள் அமைந்துள்ளன. சி.எம்.டி.. இந்த அங்காடி வளாகத்தை உருவாக்கி பராமரித்து வருகிறது.

இங்குள்ள 3,500 கடைகள் மூலம் நாளொன்றுக்கு 150 முதல் 180 டன் குப்பைகள் உருவாகின்றன. இந்த குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து மேலாண்மை செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராம்கி என்விரோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் புதன்கிழமை சென்னையில் கையெழுத்தானது. சி.எம்.டி.. துணைத் தலைவர் சூசன் மேத்யூ முன்னிலையில் உறுப்பினர் செயலர் விக்ரம் கபூரும், ராம்கி என்விரோ நிறுவனம் சார்பில் கே. பானுஜாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அடுத்த 12 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நாளொன்றுக்கு 180 டன் குப்பைகளை சேகரித்து அதில் மக்கும் குப்பைகளை (30 டன்) மின்சாரம், உரம் தயாரிக்க அளிக்க வேண்டும். மீதியுள்ள மக்காத குப்பைகளை கொடுங்கையூரில் உள்ள குப்பை சேகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப ஹைதராபாத் நிறுவனம் ஒப்புகொண்டுள்ளது.

Last Updated on Thursday, 05 November 2009 06:15
 

போடியில் நவீன கழிப்பிடம் திறப்பு

Print PDF

தினமணி 5.11.2009

போடியில் நவீன கழிப்பிடம் திறப்பு

போடி, நவ. 4: போடியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பிடத்தை எஸ். லட்சுமணன் எம்.எல்.. திறந்து வைத்தார்.

போடியில் 22-ம் வார்டில் கழிப்பிட வசதி இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் எஸ். லட்சுமணன் எம்.எல்..விடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து நவீனக் கழிப்பிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகராட்சி மூலம் கட்டப்பட்டது. இதில், நகர்மன்றத் தலைவர் ரதியாபானு முன்னிலை வகித்தார்

Last Updated on Thursday, 05 November 2009 06:10
 

மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

Print PDF

தினமணி 4.11.2009

மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

சேலம், நவ. 3: சேலம் மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, சாலையோரங்களில் கிடந்த டயர்களை துப்புரவுப் பணியாளர்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையே மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றத்தாலும், கொசுக்களினாலும் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், மழைக் காலம் தொடங்கியுள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்து,நோய்கள் மேலும் அதிகளவில் பரவக் கூடும் என்பதால் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் வின்சென்ட், அப்சரா தியேட்டர் சாலை, செர்ரி ரோடு, தாதுபாய்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

இதேபோல் சாலைகள், வீடுகளின் அருகில் கிடந்த டயர்களை துப்புரவுப் பணியாளர்கள் கைப்பற்றி வேனில் ஏற்றிச் சென்றனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.இந்த பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Wednesday, 04 November 2009 06:29
 


Page 460 of 519