Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி            18.07.2013

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்


வேலூர் மாநகராட்சி 1–வது மண்டலத்தில் ஒட்டுமொத்த துப்புரவு பணியை வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்.

ஒட்டுமொத்த துப்புரவு பணி

மழைகாலத்தில் டெங்குநோய் வராமல் தடுபதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை இணைந்து ஒட்டுமொத்த துப்புறவு பணியை மேற்கொண்டனர்.

வேலூர் மாநகராட்சி துப்புரவு பணி தொடக்க விழா நேற்று நடந்தது.வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கர், துப்புரவு பணியை தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசுகையில், வீடுகளில் உள்ள உடைந்த சட்டி, பால்கவர், பிளாஸ்டிக்குகள், உபயோகமற்ற டயர், கொட்டாங்குச்சி ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதேப் போல திறந்தவெளியில் உள்ள ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் தேங்கியுள்ள தண்ணீர் அபேட் மருந்தை போட வேண்டும்.

ஏடிஎஸ் கொசுக்கு

ஏடிஎஸ் கொசுப்புழுவை தரையில் கொட்டி அழிக்க வேண்டும், டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் வர மூலக்காரணம் ஏடிஎஸ் கொசுப்புழுதான் அதனை அழிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

துப்பரவு பணியில் பொது சுகாதாரத்துரையை சேர்ந்த 20 சுகாதார ஆய்வாளர்கள் 200 துப்புரவு பணியாளர்கள், வேலூர் மாநகராட்சியின் 2 சுகாதார ஆய்வாளர்கள் 20 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 100 துப்புரவு பணியாளர்கள் 15 வாகனங்களில் சென்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.நிகழச்சியில் மேயர் கார்த்தியாயினி, பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பூங்கொடி, கமிஷ்னர் ஜானகி, என்ஜினியர் தேவகுமார், மண்டல குழுத்தலைவர் சுனில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஒட்டு மொத்த துப்புரவு பணி தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது.இன்று(வியாழக்கிழமை) 2வது நாளில் 2வது மண்டல பகுதியிலும், நாளை 3வது மண்டல பகுதியிலும், 20ந் தேதி 4வது மண்டல பகுதியிலும் நடைபெறுகிறது.

 

குப்பையில்லா நகரமாக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

Print PDF

தினமணி              17.07.2013

குப்பையில்லா நகரமாக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

கோவையைக் குப்பையில்லா நகரமாக்க மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு செயல்விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

 ஆந்திர மாநிலம், வாரங்கல் நகராட்சியைப் போல கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு திட்டத்தைச் செயல்படுத்திய சஞ்சய் குப்தா, முத்துக்குமாரசாமி ஆகியோர் பேசினர்.

 கோவை மாநகராட்சிக் கலையரங்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மேயர் செ.ம.வேலுசாமி தலைமை வகித்தார். ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தார். படக் காட்சிகளுடன் கூடிய செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. துணை ஆணையாளர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  துப்புரவுப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பது தொடர்பாகவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதனுடன் இணைந்த பங்கேற்பு குறித்தும் படக்காட்சிகளுடன் முத்துக்குமாரசாமி விளக்கமளித்தார்.

  செயற் பொறியாளர் லட்சுமணன் வரவேற்றார்.

 

பொன்னேரி பேரூராட்சியில் சுகாதார தூய்மை பணி முகாம்

Print PDF

தினமலர்              12.07.2013

பொன்னேரி பேரூராட்சியில் சுகாதார தூய்மை பணி முகாம்

பொன்னேரி:ஒட்டுமொத்த சுகாதார தூய்மை பணி முகாம், பொன்னேரி பேரூராட்சியில் துவக்கி வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஒட்டு மொத்தமாக சுகாதார தூய்மை பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய, ஆட்சியர் வீர ராகவராவ் உத்தரவு பிறப்பித்தார்.

இதன் மூலம், ஒவ்வொரு பேரூராட்சியிலும்,மற்ற பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து,ஐந்து நாள் துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

மேற்கண்ட தூய்மை முகாம், பொன்னேரி பேரூராட்சியில், தலைவர் தனலட்சுமி தலைமையில், செயல் அலுவலர் (பொறுப்பு) சந்திரகுமார் முன்னிலையில் நேற்று நடந்தது.

வணிக வரித் துறை அமைச்சர் ரமணா கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆட்சியர் வீரராகவ ராவ், திருவள்ளூர் தொகுதி எம்.பி., வேணுகோபால், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா ஆகியோர் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

இதில், பொன்னேரி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளின் ஊழியர்கள், 60 பேர் பங்கேற்று, பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்துவது, குப்பையை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற் கொண்டனர்.

இந்த முகாம், பொன்னேரி பேரூராட்சியில் ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என, பேரூராட்சி தரப்பில் கூறப்பட்டது. பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் பார்த்திபன், வட்டாட்சியர் சாகீர் சலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 


Page 47 of 519