Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதியான தேயிலை பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினமணி 29.09.2009

காலாவதியான தேயிலை பாக்கெட்டுகள் அழிப்பு

வத்தலகுண்டு, செப்.28: வத்தலகுண்டில் காலாவதியான தேயிலை பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டன.

சென்னை பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெ. சதீஸ்குமார் வழிகாட்டுதலின் பேரில், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் அப்துல் பாரி முன்னிலையில், டாக்டர் உமா சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் வேணுகோபால், உணவு ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோர் தேயிலையில் கலப்படம் உள்ளதைக் கண்டறிய திடீர் ஆய்வு நடத்தினர்.

வத்தலகுண்டு முழுவதும் கடைகளிலும், கிட்டங்கிகளிலும் நடத்திய ஆய்வில் ரூ. 2 ஆயிரம் பெறுமான காலாவதியான தேயிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

Last Updated on Tuesday, 29 September 2009 06:21
 

அரியலூர் நகராட்சியில் 40 பன்றிகள் பிடிப்பு

Print PDF

தினமணி 29.09.2009

அரியலூர் நகராட்சியில் 40 பன்றிகள் பிடிப்பு

அரியலூர், செப். 28: அரியலூர் நகராட்சியில் அசுத்தம் ஏற்படுத்தி வந்த 40 பன்றிகளை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பிடித்து காட்டில் விடப்பட்டது.

அரியலூர் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம், அரியலூர் செட்டி ஏரியில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, நகராட்சி செயல் அலுவலர் எஸ். சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை மாணவர்கள் மூலம் அரியலூர் செட்டி ஏரியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

மேலும், அரியலூர் நகராட்சியில் அசுத்தம் செய்து வரும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று, பன்றி உரிமையாளர்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், பன்றிகள் பிடிக்கப்படாததால் நகராட்சி நிர்வாகத்தின் மூலம், பன்றிகளைப் பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியலூர் நகராட்சியில் இருந்த 40 பன்றிகள் சனிக்கிழமை பிடிக்கப்பட்டு, வேப்பந்தட்டை அருகேயுள்ள காடுகளில் விடப்பட்டன.

மழைக் காலத்தில் அரியலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில், நகராட்சியில் உள்ள வடிகால்கள் மற்றும் சாக்கடைகள் தூர்வாரப்பட்டு வெள்ளச்சேதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாக அதிகாரி எஸ். சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் ஆகியோர் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 29 September 2009 06:17
 

டீ தூளில் கலப்படம்: கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Print PDF

தினமணி 29.09.2009

டீ தூளில் கலப்படம்: கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

அரவக்குறிச்சி, செப். 27: கரூர் மாவட்டப் பகுதி கடைகளில் டீத் தூளில் கலப்படத்தைக் கண்டறிய பொது சுகாதாரத் துறையினர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சதாசிவம் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுதும் உள்ள டீக்கடை, மளிகைக் கடைகளில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பல கடைகளில் போலியான தரமற்ற கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 2 இடங்களில் எடுக்கப்பட்ட டீத்தூள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பல கடைகளில் விற்பனை உரிமம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

ஆய்வின்போது மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சாந்திக்கண்ணன், டாக்டர் கொளதமன், பாண்டியன் மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், உணவு ஆய்வாளர் வீரப்பன், சுகாதார ஆய்வாளர் டைட்டஸ், சிவலிங்கம் ஆகியோர் ஈடுபட்டனர்.

Last Updated on Tuesday, 29 September 2009 06:15
 


Page 468 of 519