Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

டீக்கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Print PDF

தினமணி 25.09.2009

டீக்கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

கரூர், செப்.24: கரூர் பகுதிகளிலுள்ள டீக் கடைகளில் நகராட்சி சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

கரூர் பகுதிகளிலுள்ள டீக்கடைகள், மளிகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் டீத்தூள்களின் தரத்தைப் பரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத் துறையிடமிருந்து உத்தரவு வரப்பெற்றது. இதையடுத்து கரூர் நகராட்சி ஆணையர் ஆர். ரமணி, சுகாதார நகர் நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், ஆய்வாளர்கள் செல்வம், தேவராஜ், முத்தையா, செந்தில் ஆகியோர் கரூர் பகுதிகளிலுள்ள டீக்கடைகள், மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினர்.

இதில், சந்தேகப்படும்படியான டீத்தூள்களின் மாதிரிகளை சேகரித்தனர். அவைகள் பாளையங்கோட்டையிலுள்ள உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனையில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கலப்படப் பொருள்களை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆணையர்.

Last Updated on Friday, 25 September 2009 05:55
 

ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீ, பான்பராக் பறிமுதல்

Print PDF

தினமணி 25.09.2009

ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீ, பான்பராக் பறிமுதல்

திருச்சி, செப். 24: திருச்சி மாநகரில் ரூ. 50,000 மதிப்பிலான கலப்படம் செய்யப்பட்ட டீ தூள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட பான்பராக் போன்ற பொருள்களை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் தலைமையிலான 15 பேர் குழுவினர், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை பகலில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின் போது முத்திரை இல்லாமலும், கலப்படம் செய்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 கிலோ டீ தூள், பள்ளி- கல்லூரிகளுக்கு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பான்பராக் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் ஆகியவற்றை இக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க டீ தூள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், கலப்படப் பொருள்கள், சுகாதாரமற்ற பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated on Friday, 25 September 2009 05:51
 

திண்டிவனம் நகராட்சியில் கால்வாய் தூர்வாரும் பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 24.09.2009

 


Page 470 of 519