Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பெரியார் பஸ் நிலையத்தில் தனியார் சார்பில் இலவச கழிப்பறை கட்டப்படும் இடம் மேயர் தேன்மொழி நேரில் ஆய்வு

Print PDF

மாலை மலர் 23.09.2009

பெரியார் பஸ் நிலையத்தில் தனியார் சார்பில் இலவச கழிப்பறை கட்டப்படும் இடம் மேயர் தேன்மொழி நேரில் ஆய்வு

மதுரை, செப். 23-

மதுரை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மாநக ராட்சி மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பெரியார் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள இலவச கழிப்பறைக்கான இடத்தை மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மேயர் தேன் மொழி நிருபர்களிடம் கூறிய தாவது:-

மதுரை மாநகரை சுத்த மாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நகரில் தேங்கும் குப்பைகளை சுத்தம் செய்து லாரிகள் மூலமாக வெள்ளைக்கல் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.

இதேபோல் நகரில் சேரும் கழிவு நீரினை பாதாள சாக்கடை மூலமாக அவனியாபுரம் மற்றும் வெள்ளைக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங் களுக்கு கொண்டு சென்று கழிவுநீரை விவசாய மற்றும் இதர பாசனத்திற்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மந்திரி மு..அழகிரி அறிவுரையின் படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், மாரியம்மன் தெப்பக்குளம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் 22 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கட்டு வதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக பெரி யார் பஸ் நிலையத்தில் அழகேந்திரா ஆட்டோ மொபைல்ஸ் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை அமைக்கப்பட உள்ளது. அதையடுத்து பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறு வனத்துடன் இணைந்து 10 இடங்களில் கழிப்பறை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது துணைமேயர் மன்னன், தலைமை பொறியாளர் சக்திவேல், நிர்வாக பொறி யாளர் மோகன்தாஸ், உதவி ஆணையாளர் தேவதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.

Last Updated on Wednesday, 23 September 2009 11:52
 

பன்றி காய்ச்சல் தடுப்பு: நாகர்கோவில் நகராட்சி சார்பில் 800 முகமூடிகள் வாங்க திட்டம்

Print PDF

தினமணி 23.09.2009

பன்றி காய்ச்சல் தடுப்பு: நாகர்கோவில் நகராட்சி சார்பில் 800 முகமூடிகள் வாங்க திட்டம்

நாகர்கோவில், செப். 22: நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 800 முகமூடிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.25) நடைபெறவுள்ள நகர்மன்ற கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

இதுபோல் பன்றி காய்ச்சல் தொடர்பாக மக்களிடையே உண்டாகும் அச்சத்தை போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 60 ஆயிரம் துண்டுப் பிரசுரங்களையும், 100 ஸ்டிக்கர்களையும் அச்சிட்டு விநியோகம் செய்யவும் நகராட்சி திட்டமிட்டுள்ளது.

 

Last Updated on Wednesday, 23 September 2009 06:36
 

செய்யாறில் ரூ.27.7 கோடியில் புதை சாக்கடை

Print PDF

தினமணி 23.09.2009

செய்யாறில் ரூ.27.7 கோடியில் புதை சாக்கடை

திருவண்ணாமலை, செப்.22: செய்யாறு நகராட்சியில் ரூ.27.7 கோடி செலவில் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையில் உள்ள செய்யாறு நகராட்சி முக்கிய வர்த்தக மையமாக விளங்குகிறது. மொத்தம் 27 வார்டுகள் உள்ள இந்நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

நகரில் புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.

அமைச்சர் எ..வேலு, ஆட்சியர் மு. ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட தீவிர முயற்சியை அடுத்து புதை சாக்கடைத் திட்டத்தை ரூ.27.7 கோடியில் செயல்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சச்சிதானந்தம் கூறியது:

இத்திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும். முதல் கட்டத்தில் 15 வார்டுகளிலும், இரண்டாம் கட்டத்தில் 12 வார்டுகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும். 45.95 கி.மீ நீளத்துக்கு குழாய்கள் பொருத்தப்படும்.

மேலும் எம்.பி., எம்.எல்.. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் செலவில் பல்வேறு சாலை பணிகள், வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

செய்யாறு பஸ் நிலையத்தில் சிமெண்ட் சாலைகள் போடுதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளும் நடைபெறும் என்றார்.

Last Updated on Wednesday, 23 September 2009 06:24
 


Page 472 of 519