Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அருப்புக்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ஆய்வு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது .

Print PDF

மாலை மலர் 22.09.2009

அருப்புக்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ஆய்வு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது .

அருப்புக்கோட்டை, செப். 22-

அருப்புக்கோட்டை நகரசபை பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. நகரசபை ஆணையர் முத்துராஜ் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் சிவபிரகாசம், ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் அருப்புக்கோட்டை நகரசபை பகுதிகளை பாதாள சாக் கடை திட்டம் பற்றியும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தாசில்தார் துரைப்பாண்டி, நகரசபை பொறியாளர் கருணாகரன், குடிநீர் வழங்கல் வாரிய பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 22 September 2009 11:50
 

பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகள் துவக்கம் .

Print PDF

தினமணி 22.09.2009

பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகள் துவக்கம் .

கோவை, செப்.21: கோவை மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.377 கோடியில் செயல்படுத்தப்படும் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கான பணிகள் திங்கள்கிழமை துவங்கியது.

ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மேயர் ஆர்.வெங்கடாசலம், ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் ஆகியோர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியைத் துவக்கி வைத்தனர் (படம்).

கோவை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளில் ஏற்கெனவே 30 வார்டுகளில் பாதாளச் சாக்கடை வசதி உள்ளது. விடுபட்ட வார்டுகளுக்கும் இத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ரூ.377 கோடியில் ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தில் இவ்வசதி கொண்டு வரப்படுகிறது.

திட்ட செயல்பாட்டுக்காக மாநகராட்சியின் வார்டுகள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மண்டலங்களில் ரூ.191 கோடியில் சோதனைக் குழிகள், கழிவுநீர் குழாய்கள் பதிக்க பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 510 கி.மீ.க்கு கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் பதிக்கப்படும். 18 ஆயிரத்து 750 இடங்களில் சோதனைக் குழிகள், 680 கி.மீ. நீளத்திற்கு வீட்டு இணைப்புக் குழாய்கள் அமைக்கப்படும். இப்பணிகளை இரண்டரை ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இப் பணிகளை மேற்கொண்டுள்ளன.

பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு 3 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி ஏற்கெனவே துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் சி.பத்மநாபன், எஸ்.எம்.சாமி, வி.பி.செல்வராஜ், .பைந்தமிழ், சுகாதாரக் குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, எதிர்க் கட்சித் தலைவர் வெ..உதயகுமார், கல்விக் குழுத் தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 22 September 2009 05:34
 

விழுப்புரம் பஸ் நிலையத்தில் மழைநீர் கால்வாய் பணி தீவிரம்

Print PDF

தினமணி 21.09.2009

விழுப்புரம் பஸ் நிலையத்தில் மழைநீர் கால்வாய் பணி தீவிரம்

விழுப்புரம், செப். 20: விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதால் மழைக் காலங்களில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த மழைநீரை வெளியேற்ற ரூ.30 லட்சம் செலவில் நிரந்தர கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்டவை ஏரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் சிறிய மழை பெய்தாலே மழைநீர் அதிக அளவில் தேங்கி விடுகிறது. புதிய பஸ் நிலையத்தில் மழைக் காலங்களில் எப்போதும் நீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கும். பல நேரங்களில் டீசல் என்ஜின் கொண்டு மழைநீரை வெளியேற்றும் சம்பவங்களும் நடந்தன.

நிரந்தர கால்வாய்

இம் மழைநீரை வெளியேற்ற நிரந்தர கால்வாய்களை அமைக்க விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக பிரித்து ஒப்பந்தாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பஸ் நிலையத்தில் நிர்ந்தர கால்வாய் அமைத்து அவற்றை பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள தொட்டியில் விடுவதுபோல் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பின்னர் இந்த தொட்டிகளில் தேங்கும் நீர் சாலாமேடு பகுதிக்கு அனுப்பப்படும். அப் பகுதி பஸ் நிலையத்தில் இருந்து மேடான பகுதியாக உள்ளதால் அங்கு மோட்டார் கொண்டு தண்ணீர் வெளியேற்றும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இனி வரும் காலங்கள் மழைக்காலங்கள் என்பதால் இப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்கின்றனர் இப் பகுதி மக்கள்.

 

 


Page 475 of 519