Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்

Print PDF

தினகரன் 05.09.2009

 

சென்னையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்: மேயர் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 05.09.2009

சென்னையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்: மேயர் தொடங்கி வைத்தார்

சென்னை, செப். 5-

மாநகராட்சி மூலம் சென்னையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயது வரை அவ்வப்போது போடவேண்டிய தடுப்பூசி, கொடுக்க வேண்டிய சொட்டு மருந்துகள் பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் நினைவூட்டும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய திட்டத்தை கோடம்பாக்கத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின் னர் அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியின் சுகாதார துறை பல்வேறு வளர்ச்சிக்கான நட வடிக்கைகளை எடுத்து வரு கிறது. தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக 10 மண்டலங்களிலும் 24 மணி நேர மகப்பேறு ஆஸ் பத்திரி செயல்பட்டு வரு கிறது. ஆண்டு தோறும் சென்னையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன.

1 வயது வரை குழந்தைகளுக்கு 7 வகையான உயிர் கொல்லி நோய்களுக்கு தடுப்பு ஊசி மற்றும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் காச நோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, ரன ஜன்னி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

இந்த நோய்களுக்கு எந்தந்த காலக்கட்டங்களில் தடுப்பு ஊசி போட வேண் டும் என்பதை பெற்றோர் களிடம் டாக்டர்கள் அறி வுறுத்துகிறார்கள்.

இருந்தாலும் பல்வேறு வேலை பளுவால் குறிப்பிட்ட காலங்களில் தடுப்பு மருந்து கொடுப்பதை மறந்து விடுகிறார்கள்.

எனவேதான் மாநகராட்சி இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பிரசவத்துக்கு வரும்போதே அவர்களின் செல்போன் எண்கள் வாங்கப்படும். 1 வயது ஆகும் வரை தடுப்பு ஊசி போடுவது எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.

சென்னையில் ஏற்கனவே காமராஜர் சாலை, அண்ணா சாலைகளில் சுவரொட்டி மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆசிரியர் தினம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலும், திருவொற்றி யூர் நெடுஞ்சாலையிலும் வருகிற 10-ந்தேதி முதல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 9-ந் தேதி இந்த இரண்டு சாலை களிலும் மாநகராட்சி ஊழியர்கள் விளம்பரங்களை அப்புறப் படுத்துவார்கள். சென்னை நகரை தூய்மையாக வைத்து கொள்ள அனை வரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

நேபாளத்தில் செப்டம்பர் 7ல் தென்கிழக்கு ஆசிய சுகாதார அமைச்சர்கள் மாநாடு

Print PDF

தினமணி 05.09.2009

நேபாளத்தில் செப்டம்பர் 7ல் தென்கிழக்கு ஆசிய சுகாதார அமைச்சர்கள் மாநாடு

காத்மாண்டு, செப். 4: தென்கிழக்கு ஆசியாவில் மனித சுகாதாரத்தில் பருவநிலை மாறுபாட்டின் தாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காத்மாண்டில் 27-வது பிராந்திய சுகாதார அமைச்சர்களின் மாநாடு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்புக் குழுவின் 62-வது சந்திப்புக் கூட்டமும் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா உள்பட 11 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இவர்களுடன் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விரு உயர்நிலைக் கூட்டங்களிலும் உலகம் முழுவதும் பரவியுள்ள தொற்று நோய் காய்ச்சலுக்கான மருந்து தயாரித்தல், தயாரித்த மருந்து நோய் தீர்க்கக் கூடியதாக இருப்பின் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதாரம் குறித்த பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கடல்நீர் மட்டம் உயருதல், பனிப்பாறைகள் உருகுதல், திடீர் திடீரென ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் என பருவநிலை மாறுபாடு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் சுகாதார அமைச்சர்கள் தங்கள் நாடுகளில் உள்ள சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான சுகாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள்.

சுகாதார அமைச்சர்களின் மாநாட்டைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவன அமைப்பின் பிராந்தியக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

செப்டம்பர் மாதம் 7 முதல் 10-ம்தேதி வரை நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா, வங்க தேசம், இந்தோனேஷியா, மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, வடகொரியா, தாய்லாந்து, பூடான் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள் என்று உலக சுகாதாரநிறுவனம் தெரிவித்துள்ளது.

 


Page 486 of 519