Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கோயில் குளத்தில் குப்பைகள் அகற்றம்

Print PDF

தினமணி 01.09.2009

கோயில் குளத்தில் குப்பைகள் அகற்றம்

பொன்னேரி, ஆக. 31: தினமணி செய்தி காரணமாக பொன்னேரி அகத்தீஸ்வர் ஆலய கோயில் குளத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை அகற்றினர்.

பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் ஆலய திருக்குளத்தின் நீரில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், அதனால் நீர் மெல்ல மாசடைந்து வருகிறது என கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தினமணியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து, அகத்தீஸ்வரர் ஆலய குளத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பொன்னேரி பேரூராட்சி ஊழியர்கள் அங்கிருந்து அகற்றினர்.

பக்தர்கள் வரவேற்பு

கோயில் குளத்தில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றியதை நாள் தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரவேற்றதுடன், இச் செய்தியை வெளியிட்ட தினமணிக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

 

 

"விதிகளை மீறி பன்றிகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை'

Print PDF
தினமணி 01.09.2009

"விதிகளை மீறி பன்றிகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை'

விழுப்புரம், ஆக. 31: விழுப்புரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பன்றிகள் மக்கள் வசிப்பிடங்கள் அருகே சுற்றித் திரிந்தால் அதை வளர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி எச்சரித்தார். இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தற்போது ஸ்வைன் புளூ என்னும் வைரஸ்ஸôல் பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இது பரவுவதை தடுக்க பொதுமக்கள் தங்கள் சுற்றுப் புறங்களில் சாக்கடை நீர் தேங்காமலும், பன்றிகள் சுற்றித் திரியாமலும் விழிப்புடன் பார்த்து கொள்ள வேண்டும். ஊராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களும், நகராட்சி தலைவர்கள், ஆணையர்களும் இவற்றை கண்காணிக்க வேண்டும். பன்றி வளர்ப்போர் ஊருக்கு ஒதுக்குபுறமாக பன்றிகளை பட்டிகளில் அடைத்து வளர்க்க வேண்டும்.

மீறினால் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிப்பதோடு, பன்றி வளர்ப்போர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படியும் பொது சுகாதாரச் சட்டம் 1939(44)-ன் படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

கூவம், பக்கிங்ஹாம் கால்வாயில் 15 படகுகள் மூலம் கொசு ஒழிப்பு

Print PDF

தினமணி 01.09.2009

கூவம், பக்கிங்ஹாம் கால்வாயில் 15 படகுகள் மூலம் கொசு ஒழிப்பு

சென்னை, ஆக. 31: கூவம் ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் 15 படகுகள், கட்டுமரங்களில் சென்று கொசு ஒழிப்புப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கூவம் ஆற்றில் கட்டுமரங்களைக் கொண்டு, கொசு மருந்து தெளிக்கும் பணியை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள 2,500 தொழிலாளர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுவதையும் அவர் ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை கூவம் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட 123 கி.மீ. நீளமுள்ள நீர்வழிப் பாதைகளிலும், 1,000 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்களிலும் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் கொசுப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 9 கட்டுமரங்களும், 6 ஃபைபர் படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புழுக்கொல்லி மருந்துகளும் தெளிக்கப்படுகின்றன. இதற்காக 406 தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகரில் 50-க்கும் மேற்பட்ட புகை பரப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இப் பணிகளில் 50 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி மருந்தகங்களிலும், தாய் சேய் நல மையங்கள் உள்ளிட்ட 74 இடங்களில் கர்ப்பிணிகளுக்கு மலேரியா நோய் கண்டறிய ரத்தம் எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.

இது தவிர கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார் மா. சுப்பிரமணியன்.

 


Page 490 of 519