Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வாலாஜாபாத் தெருக்களில் 50 பன்றிகள் பிடிபட்டன: பேரூராட்சி அதிரடி

Print PDF

தமிழ் முரசு              27.06.2013

வாலாஜாபாத் தெருக்களில் 50 பன்றிகள் பிடிபட்டன: பேரூராட்சி அதிரடி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், மழைநீர் கால்வாய், காலி இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பன்றிகள் இறங்கி துர்நாற்றம் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து  பன்றி பிடிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுத்தது.  நேரு நகர், சேர்க்காடு, ஆறுமுகபேட்டை ஆகிய பகுதியில் சுற்றிய 50 பன்றிகள் நேற்று பிடிக்கப்பட்டது. அவற்றை திருப்போரூர் பகுதியில் உள்ள வனத்தில் விட்டனர்.

இது பற்றி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறுகையில்,  ‘பன்றி உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்தோம். அவர்கள் அலட்சியமாக இருந்ததால் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பேரூராட்சி இறங்கியது. வெள்ளேரியம்மன் கோயில் பகுதி, பாலாற்று பகுதி மற்றும் அனைத்து வார்டுகளில் உரிமையாளர்கள் பன்றிகளை அப்புறப்படுத்தாவிட்டால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

 

துப்புரவாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம்

Print PDF

தினமணி        27.06.2013

துப்புரவாளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம்


சிவகங்கை:""இளையான்குடி பேரூராட்சியில்,துப்புரவாளர் பணிக்கு, பதிவு மூப்பு வெளியிடப்படும்,'' என, வேலை வாய்ப்பு அலுவலர் தொண்டீஸ் வரன் தெரிவித்தார்.

கல்விதகுதி, எழுதபடிக்க தெரிந்தால் போதும். வயது: 01.01.2013ல் மிக பிற்பட்டோர் (முன்னுரிமையற்றவர்) 32க்குள். இளையான்குடியை சேர்ந்தவர்கள், உரியசான்றுடன், ஜூன் 28ல் நேரில் வரவும், என்றார். 

 

ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               26.06.2013

ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்

ஈஷா யோகா மையம் சார்பில் ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியம் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

இதில் ஈஷா கிரியா என்ற யோகா பயிற்சியை யோகா ஆசிரியர்கள் துப்புரவு தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, ஈஷா யோகா வகுப்புகளின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுவாமி பிரபோதா, ஈரோடு ஈஷா யோகா மைய ஒருங்கிணைப்பாளர் சங்கர், மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தினமும் 120 பேர் என மொத்தம் 600 துப்புரவு தொழிலாளர்களுக்கு யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

 


Page 50 of 519