Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மெரீனா கடற்கரையில் 65 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

Print PDF

தினமணி 01.09.2009

மெரீனா கடற்கரையில் 65 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

சென்னை, ஆக. 31: மெரீனா கடற்கரையில் கடந்த 3 நாள்களில் 65 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டன.

சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கடந்த 29 முதல் 31-ம் தேதி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இதையடுத்து கடற்கரையில் குவிந்த களிமண், காகிதங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியில் 150 ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 65 மெட்ரிக் டன் எடையுள்ள கழிவுகள் சேகரிக்கப்பட்டு, 14 லாரிகள் மூலம் அகற்றப்பட்டதாக மாநகராட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

 

குப்பைகளை விளைக்கு வாங்கும் ஜ.டி.சி. நிறுவனம்

Print PDF

தினமலர் 31.08.2009

 

நகராட்சிப் பகுதிகளில் திடீர் சோதனை: ரூ.3 லட்சம் காலாவதி பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 31.08.2009

நகராட்சிப் பகுதிகளில் திடீர் சோதனை: ரூ.3 லட்சம் காலாவதி பொருள்கள் பறிமுதல்

நாமக்கல், ஆக. 30: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் நடந்த சோதனையில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான காலாவதி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சிப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஹோட்டல், டீ கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் காலாவதியான உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஒரே நாளில் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதன்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரன் மேற்பார்வையில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை ஒரே நாளில் சோதனை நடத்தப்பட்டது.

பேருந்துநிலையப் பகுதிகளில் உள்ள கடைகள், பிரதான சாலைகளில் உள்ள கடைகளில் அந்தந்த நகராட்சி சுகாதார அலுலர்கள், உணவு ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சோதனையிட்டதில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள், தரமற்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், நுகர்வோருக்கு கெடுதல் விளைவிக்கும் வகையிலான பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


Page 491 of 519