Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தொற்று நோய் மருத்துவமனை ரூ.13.53 கோடியில் நவீன மையம்: வட சென்னையில் 11.84 கோடி வளர்ச்சி பணி திட்டங்கள்- மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Print PDF
மாலை மலர் 25.08.2009

தொற்று நோய் மருத்துவமனை ரூ.13.53 கோடியில் நவீன மையம்: வட சென்னையில் 11.84 கோடி வளர்ச்சி பணி திட்டங்கள்- மு.. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

 

 

சென்னை, ஆக. 25-

மேயர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வட சென்னையில் தண்டையார் பேட்டை, தொற்றுநோய் மருத்துவ மனை அருகில் வரும் 27-ந்தேதி மாலை 5 மணி அளவில் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் விழாவில் துணை முதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை நவீனமய மாக்கும் கட்டடப்பணிக்கு ரூபாய் 13.53 கோடியில் அடிக்கல் நாட்டுகிறார்.

வட சென்னையில் 8 உடற்பயிற்சிக்கூடங்கள் ரூபாய் 1.88 கோடியிலும், 43 சத்துணவுக்கூடங்கள் ரூபாய் 4.92 கோடியிலும், 13 சமையற் கூடங்கள் ரூபாய் 1.40 கோடியிலும், ஒரு அங்கன்வாடி மையம் ரூபாய் 13 லட்சத்திலும், ஒரு மருந்தக கூடுதல்கட்டடம் ரூபாய் 9 லட்சத்திலும், பள்ளி வகுப்பறைகள் ரூபாய் ஒருகோடி செலவிலும், 3 கலையரங்கங்கள் ரூபாய் 41.82 லட்சத்திலும், ஒரு பள்ளிக் கட்டடம் ரூபாய் 80.50 லட்சத்திலும், ஒரு சமுதாய சேவை மையம் ரூபாய் 8.20 லட்சத்திலும்அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்திடல் ரூபாய் 15.50 லட்சத்திலும், ஒரு அறிவியல் ஆய்வகம் ரூபாய் 8.30 லட்சத்திலும், ஒரு விளையாட்டுத்திடல் ரூபாய் 20.25 லட்சத்திலும், 64-வது வார்டு அலுவலகம் ரூபாய் 40 லட்சத்திலும், ஒரு உயர்கோபுர மின்விளக்கு ரூபாய் 5 லட்சத்திலும், 2 பொதுகழிப்பிடங்கள் ரூபாய் 18.61 லட்சத்திலும் என மொத்தம் 80 வளர்ச்சிப்பணிகள் ரூபாய் 11.84 கோடியில் வடசென்னையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றை ஒரே நாளில் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக துணை முதல்- அமைச்சர் மு.. ஸ்டாலின்திறந்து வைத்து, விழாச்சிறப்புரையாற்றுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சுகாதாரமற்ற முறையில் விற்பனை: 200 பிளாட்பார கடைகளில் உணவு பொருட்கள் பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் இன்று நடவடிக்கை

Print PDF

மாலை மலர் 25.08.2009

சுகாதாரமற்ற முறையில் விற்பனை: 200 பிளாட்பார கடைகளில் உணவு பொருட்கள் பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் இன்று நடவடிக்கை

மதுரை, ஆக. 25-

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார மற்ற முறைகளில் பிளாட் பாரங்கள் வடை, பஜ்ஜி மற்றும் உணவு பலகாரங்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்று காலை சுகாதாரத் துறை அதிகாரி யசோதை மணி தலைமையில் அதிகாரிகள் இன்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பெரியார் பஸ் நிலையம், திண்டுக்கல் ரோடு, நேதாஜி வீதி மற்றும் பல்வேறு பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட பிளாட்பார கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது. அந்த கடையில் இருந்து உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு பிளாட்பாரத்தில் கடை போடக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Wednesday, 26 August 2009 10:22
 

சென்னையை புகையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை

Print PDF

தினமலர் 25.08.2009

Last Updated on Wednesday, 26 August 2009 10:18
 


Page 496 of 519