Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடங்கள்: புது தில்லி முனிசிபல் கவுன்சில் திட்டம்

Print PDF

தினமணி         25.06.2013

பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடங்கள்: புது தில்லி முனிசிபல் கவுன்சில் திட்டம்

புது தில்லி முனிசிபல் கவுன்சில் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க கவுன்சில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பல தரப்பட்ட வயதினரும் பூங்காக்களுக்கு வந்து செல்வதாலும், வழக்கமான உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லாததாலும், பூங்காக்களில் திறந்தவெளியில் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:

பெரியவர்கள் உடற்பயிற்சிக் கருவிகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்ய விரும்புகின்றனர். சிறு வயதினரும் உடற்பயிற்சி செய்ய ஆசைப்படுகின்றனர். 

இரு தரப்பினரும் பூங்காக்களுக்குச் செல்கின்றனர் என்பதால், அங்கு உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க முனிசிபல் கவுன்சில் விரும்புகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

 

கொசு ஒழிப்புக்கு நொச்சி செடிகளை பயன்படுத்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி               21.06.2013

கொசு ஒழிப்புக்கு நொச்சி செடிகளை பயன்படுத்த மாநகராட்சி முடிவு

கொசுக்களை அழிக்க 10 லட்சம் நொச்சிச் செடிகளை வளர்க்கவும், வீடுகளுக்கு வழங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு, விருகம்பாக்கம் ஆறு, கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி, அம்பத்தூர் உபரி ஏரி உள்ளிட்ட இடங்களில் உற்பத்தியாகும் கொசுக்களை ஒழிப்பதற்கு ரூ.6.3 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 10 லட்சம் நொச்சி செடிகளை நட்டு, வளர்க்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 3 அடி உயரம் கொண்ட 5 லட்சம் செடிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இதில் 3 லட்சம் நொச்சி செடிகளை நீர்வழித் தடங்களில் நட்டு 6 மாத காலத்துக்குப் பராமரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் நொச்சி செடிகளை வீடுகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டள்ளது.

 

கொசு இனப்பெருக்கத்தை தடை செய்யும் வகையில் சென்னையில் 10 லட்சம் நொச்சி செடிகள் வளர்க்க திட்டம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி             20.06.2013 

கொசு இனப்பெருக்கத்தை தடை செய்யும் வகையில் சென்னையில் 10 லட்சம் நொச்சி செடிகள் வளர்க்க திட்டம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை


சென்னையில் இயற்கை முறையில் கொசு இனப்பெருக்க தடை செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி சென்னை முழுவதும் 10 லட்சம் நொச்சி செடிகளை வளர்க்க திட்டம் தீட்டி உள்ளது.கொசுக்களை ஒழிப்பதற்காக, முதன் முறையாக சென்னை மாநகரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு, விருகம்பாக்கம் ஆறு, கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, அம்பத்தூர் உபரி ஏரி ஆகிய 6 ஆறுகளும் ரூ.6.3 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி மூலம் தூர்வாரப்பட்டது.

10 லட்சம் நொச்சி செடிகள்

தற்போது இயற்கை முறையில் கொசுவை கட்டுப்படுத்தும் வகையிலும், நமது பாரம்பரிய வைத்திய முறையினை பொதுமக்களிடையே எடுத்து செல்லும் வகையிலும், தமிழக முதல்–அமைச்சர் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 10 லட்சம் நொச்சி செடிகளை வளர்க்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.அதன்படி முதல் கட்டமாக 3 அடி உயரம் உள்ள 5 லட்சம் நொச்சி செடிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் 3 லட்சம் நொச்சி செடிகள் நீர்வழி தடங்களில் நடவு செய்யப்பட்டு, 6 மாத காலத்திற்கு பராமரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் நொச்சி செடிகள் வீடுகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கொசு இனப்பெருக்கத்திற்கு தடை

நொச்சி செடிகள் இருக்கும் இடத்தில் சுவாசிக்கும் காற்று நுரையீரலை பாதுகாக்க உதவுகிறது. இச்செடியில் உள்ள வேதி பொருட்கள் நுண் பூச்சிகளான ஈ, கொசு போன்றவைகளை அருகில் அண்டவிடாமல் தடுக்கும் தன்மை உடையது.மேலும் நொச்சி செடியில் இருந்து வரும் வாசனையானது கொசுவின் இன பெருக்கத்தினை தடை செய்யக்கூடியவை. இந்த செடியின் வேரில் உள்ள வேதி பொருள் மூலம் மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது.சென்னை மாநகராட்சி மூலம் கோரப்பட்டுள்ள நொச்சி செடி ஒப்பந்தத்தின் மூலம் தோட்டக் கலை படித்த இளைஞர்கள் மற்றும் கிராமப்புறங்களில் தோட்ட பண்ணைகள் வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளம் பெருகுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.மேற்கண்ட தகவல், சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Page 52 of 519