Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருவத்திபுரம் நகராட்சியில் ஒட்டுமொத்த சுகாதாரப் பணி

Print PDF
தினமணி         07.06.2013

திருவத்திபுரம் நகராட்சியில் ஒட்டுமொத்த சுகாதாரப் பணி


திருவத்திபுரம் நகராட்சி சார்பில் ஒட்டுமொத்த சுகாதாரப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருவத்திபுரம் நகராட்சி 12-வது வார்டு பகுதியான சமாதியான்குளத் தெரு, அறிஞர் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சியின் அனைத்து துப்புரவு பணியாளர்களையும் கொண்டு சாலையோரம் இருந்த மண் குவியல்கள், கழிவுநீர் கால்வாயில் போடப்பட்ட குப்பை, தெரு ஓரப்பகுதிகளில் இருந்த முட்செடிகள் ஆகியவற்றை அகற்றி சுத்தப்படுத்தினர்.

இப்பணியினை நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் பவானி அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன் ஆகியோர் மேற்பார்வைட்டனர்.
 

ஜூன் 6-ல் ஆண்கள் கருத்தடை முகாம்

Print PDF
தினமணி                03.06.2013

ஜூன் 6-ல் ஆண்கள் கருத்தடை முகாம்

சென்னையில் ஆண்கள் கருத்தடை முகாம் ஜூன் 6-ஆம் தேதி நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 50 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம் ஜூன் 6-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த முகாம் பழைய வண்ணாரப்பேட்டை சோலையம்மன் தெருவில் உள்ள சஞ்சீவராயன்பேட்டை 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

இந்த சிகிச்சை 2 நிமிடங்களில் முடிந்துவிடும். சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை பெற நினைத்தால் மாற்று சிகிச்சை செய்து கொள்ளலாம். கருத்தடை செய்து கொள்பவர்களுக்கு ரூ. 1,100 ஊக்கத் தொகையுடன் போக்குவரத்து செலவு ரூ. 100-ம் வழங்கப்படும். மேலும் ரூ. 250 மதிப்பிலான சிறப்பு பரிசும் வழங்கப்படும். விவரங்களுக்கு 044 25951219, 9445190715, 9445194932 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க கட்டணம் நிர்ணயம்

Print PDF
தினகரன்         03.06.2013

பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க கட்டணம் நிர்ணயம்


ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில் தினசரி 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வெண்டிபாளையம் குப்பை கிடங்கிலும், வைராபாளையம் குப்பை கிடங்கிலும் சேகரிக்கப்பட்டு உரமாக தயாரிக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் தார்ரோடுகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. 40 மைக்ரான் அளவுக்குட்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த பைகளை பயன்படுத்தினால் மாநகராட்சி சார்பில் 100 ரூபாய் அபராதமாக உபயோகிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011 விதி எண் 10ன்கீழ் மாநகராட்சி பகுதிகளில் உபயோகிப்பாளர்களுக்கு எந்த ஒரு பிளாஸ்டிக் பைகளையும் விற்பனை செய்பவர்கள் இலவசமாக வழங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையிலும், அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதன்படி 40 மைக்ரான் அளவுக்குட்பட்ட 10க்கு 11 அளவு பைகளுக்கு ரூ.2.50ம், 12க்கு 14 அளவிற்கு ரூ.3ம், 13க்கு 16 அளவிற்கு ரூ.3.50ம், 16க்கு 20 அளவிற்கு ரூ.4ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பை விற்பவர்கள் மேற்கண்ட கட்டண அடிப்படையில் தான் விலை வைத்து விற்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
 


Page 55 of 519