Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதார பணியாளர்களுக்கு சீருடை

Print PDF
தினத்தந்தி              31.05.2013

சுகாதார பணியாளர்களுக்கு சீருடை


திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் மு.சுரேஷ்பாபு தலைமை தாங்கி, சுகாதார பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கொ.ராஜையா, சுகாதார ஆய்வாளர் பூவையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

225 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

Print PDF
தினமணி       31.05.2013

225 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை


செய்யாறு நகரில் சுற்றித் திரிந்த 225 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை வியாழக்கிழமை செய்யப்பட்டது.

இந்நகரில் உள்ள 27 வார்டுகளில் 779 தெரு நாய்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில், 225 தெரு நாய்கள் ஹேண்ட்ஸ் ஃபார் அனிமல் எனும் தொண்டு

நிறுவனத்தின் உதவியுடன் பிடிக்கப்பட்டன.பின்னர் செய்யாறு கால்நடை மருத்துவமனையில், மருத்துவர் கோபி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.வெங்கட்ராமன், பி.எஸ்.ஏகாம்பரம், நகராட்சி பிரதிநிதி பி.சிவானந்தக்குமார்,  பொதுப் பணி மேற்பார்வையாளர் பாஸ்கரன், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன் உள்ளிட்டோர் இப்பணிகளை மேற்பார்வையிட்டனர்.
 

பஸ் நிலையம் சுத்தம் செய்யும் பணி

Print PDF
தினமணி       31.05.2013

பஸ் நிலையம் சுத்தம் செய்யும் பணி


பழனி நகராட்சி சார்பில், பஸ் நிலையங்கள் புதன்கிழமை கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

 தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனிக்கு தினமும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனியில் உள்ள வ.உ.சி. பஸ் நிலையம் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் இரண்டிலும், பயணிகள் மற்றும் பொதுமக்களால் ஏற்படுத்தப்படும் அசுத்தத்தால், சுகாதாரக் கேடு பரவுகிறது.

 இதில், விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையம் ஐ.எஸ்.ஓ. தரம் வாய்ந்தது.  இந்நிலையில், நகராட்சி ஆணையர், நகர்மன்றத் தலைவர் ஆகியோர் உத்தரவின்பேரில், பஸ் நிலையங்களில் இருந்த குப்பைகள் புதன்கிழமை இரவு அகற்றப்பட்டது.

 தொடர்ந்து, லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பீய்ச்சி அடிக்கப்பட்டு பஸ் நிலையம் கழுவி விடப்பட்டது. கொசுக்களை அழிக்கும் விதமாக அல்லத்ரீன் கலந்த மருந்தும் போகிங் இயந்திரங்கள் மூலம் அடிக்கப்பட்டது.

 பழனியில் குடியிருக்கும் மக்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது.  குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், பஸ் நிலையத்தை நகராட்சி நிர்வாகம் கழுவிவிட்டது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும் பக்தர்கள், பயணிகள் நகராட்சி செயலுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 
 


Page 56 of 519