Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

2,000 பிளாஸ்டிக் கழிவறைகள் அமைக்க 4-வது முறையாக டெண்டர்

Print PDF
தினமணி        04.05.2013

2,000 பிளாஸ்டிக் கழிவறைகள் அமைக்க 4-வது முறையாக டெண்டர்


சென்னையில் 2,000 பிளாஸ்டிக் கழிவறைகளை அமைக்க 4-வது முறையாக டெண்டர் வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் 5,000 பிளாஸ்டிக் கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் டெண்டர் வெளியிட்டது. ஆனால் இந்த டெண்டரை ஏற்க ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. அதன் பின்னர் முதலில் 2,000 கழிவறைகளை அமைக்க இரண்டு முறை டெண்டர் கோரப்பட்டது. அவற்றையும் யாரும் ஏற்க முன்வரவில்லை.

இந்த கழிவறைகள் கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் என்ற அடிப்படையில் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் கூறியது: 3 முறை டெண்டர் வெளியிட்டும், இந்தப் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. 1 000, 500, 500 என்று மூன்று டெண்டர்களாக பிரித்து வெளியிட்டபோது, 1,000 கழிவறைகளை அமைக்க ஒரு நிறுவனம் மட்டுமே முன்வந்தது. ஆனால் அந்த நிறுவனமும் ஒப்பந்தம் கோர தகுதியில்லாததால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் ஒப்பந்ததாரர்களை கவரும் வகையில் சில மாற்றங்களுடன் டெண்டர் கோரப்படும். அப்போதும் ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால், சென்னை மாநகராட்சியே அந்தப் பணியை மேற்கொள்ளும்.

இப்போது துருப்பிடிக்காத ஸ்டீல் மூலம் பஸ் நிழற்குடை அமைக்கப்படுவது போன்று பிளாஸ்டிக் கழிவறைகளையும் மாநகராட்சியே அமைக்கும் என்றார். சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது போன்ற பிளாஸ்டிக் கழிவறைகளை "நம்ம டாய்லெட்' என்ற பெயரில் சோதனை முறையில் அமைத்து தாம்பரம் நகராட்சி செயல்படுத்தி வருகிறது.
 

கொசுக்களை கொல்லும் வலை

Print PDF
தினமணி               04.05.2013

கொசுக்களை கொல்லும் வலை


நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுக்களை கொல்லும் வகையிலான கொசு வலைகளை வழங்க சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். அதன்படி, மாநகராட்சி சார்பில் கொசு வலைகள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், கொசு வலைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மாதிரி கொசு வலைகளை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொசு வலையின் மீது கொசுக்கள் அமர்ந்தவுடன் அவை இறக்கும் வகையிலான கொசு வலைகளை வழங்க இப்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வகையிலான கொசு வலைகளை தயாரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த கொசு வலைகளை தயாரித்து வழங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் கொசு வலைகள் பெறுவதற்கான தகுதியுடைய பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

ஆப்பிரிக்காவில் உள்ளது போல: ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளில் கொசுக்களை கொல்லும் வகையிலான கொசு வலைகள் வழங்கப்படுகின்றன. இந்த வலைகளில் உள்ள ஒருவித ரசாயனப் பொருள் கொசுக்கள் அமர்ந்தவுடன் அவற்றை கொன்று விடும். இந்த கொசு வலைகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

அதே போன்ற கொசு வலைகளை சென்னையில் உள்ள நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொசு வலைகளை தயாரிக்க ஆகும் செலவு, எத்தனை கொசு வலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பன போன்ற தகவல்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். தமிழக அரசின் அனுமதியுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

ஆய்வு செய்ய தனிக் குழு: நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் மக்கள் குறித்த கணக்கெடுப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவும், கொசு வலைகளின் தரம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யவும் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மாநகராட்சியின் உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கணக்கெடுப்பு மட்டுமல்லாமல், கொசு வலைகளை இலவசமாக வழங்குவதால் ஏற்படும் செலவினம் குறித்தும் ஆய்வு செய்வார்கள். விரைவில் இந்த கொசு வலைகள் வழங்கும் பணிகள் தொடங்கும், என்று அந்த அதிகாரி கூறினார்.
 

"கொசுக்களை ஒழிக்க ரூ. 20 கோடியில் திட்டம்'

Print PDF

தினமணி                  30.04.2013

"கொசுக்களை ஒழிக்க ரூ. 20 கோடியில் திட்டம்'

தமிழகத்தில் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கு ரூ. 20 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள் கிழமை நடைபெற்ற சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளித்தபோது வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப் பணித்துறையுடன் இணைந்து செயல்படுத்த ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 


Page 61 of 519