Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாமல்லபுரத்தில் தெரு நாய்கள் சுற்றிவளைப்பு

Print PDF
தினமலர்        18.04.2013

மாமல்லபுரத்தில் தெரு நாய்கள் சுற்றிவளைப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், தெரு நாய்களை, பேரூராட்சி நிர்வாகம் பிடித்தது.

மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவ கலைச் சின்னங்களை கண்டுகளிக்க, சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் சென்றுவரும் பகுதிகளில், ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன.

பயணிகளை கண்டதும், அவை குரைத்து விரட்டி செல்கின்றன. அவர்கள் அலறி ஓடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுகின்றன.

நாய் தொல்லை அதிகரித்துவந்த நிலையில், அனைத்து பேரூராட்சிகளிலும், நாய்களை பிடிக்க, பேரூராட்சிகள் இயக்குனரகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், "புளூ கிராஸ்' அமைப்பினருடன் சேர்ந்து, நேற்று நாய்களை பிடித்தனர்.

இரண்டு நாட்களில், 56 நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை அறுவை சிகிச்சைக்காக, சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன என, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
 

தடை மீறி வளர்க்கப்பட்ட 42 பன்றிகளுக்கு "சிறை'

Print PDF
தினமலர்        18.04.2013

தடை மீறி வளர்க்கப்பட்ட 42 பன்றிகளுக்கு "சிறை'


உடுமலை:தடையை மீறி வளர்க்கப்பட்ட பன்றிகளை, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

உடுமலை நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் வளர்க்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நகர் நல அலுவலர் (பொறுப்பு) இளங்கோவன், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பன்றிகள் வளர்க்கப்படுகிறதா என, பழனியாண்டவர் நகர், அமீர் லே-அவுட், சவுதாமலர் லே-அவுட், அனுசம் நகர், சாதிக்நகர், பெரியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தடையை மீறி வளர்க்கப்பட்ட பன்றிகள், மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்ட குழுவினர் மூலம் பிடிக்கப்பட்டன. இதில், 42 பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
 

சுகாதார சீர்கேட்டை தடுக்க பொது இடத்தில் இறைச்சிக்கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

Print PDF
தினத்தந்தி        16.04.2013

சுகாதார சீர்கேட்டை தடுக்க பொது இடத்தில் இறைச்சிக்கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பொது இடத்தில் இறைச்சிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அனுமதி பெறாத இறைச்சிக்கடைகளில் சோதனை நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்துள்ளார்.

இறைச்சிக்கழிவுகள்

கோவை மாநகராட்சி பகுதியில் உரிமம் பெற்ற இறைச்சிக்கடைகளை விட உரிமம் பெறாத இறைச்சிக்கடைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிக இறைச்சிக்கடைகளும் நகரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த கடைகளின் இறைச்சிக்கழிவுகளை சாக்கடை கால்வாய்கள், குளக்கரைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இறைச்சிக்கழிவுகளை தின்னும் தெருநாய்களும் வெறிநாய்களாக மாறி பொதுமக்களை துரத்தி, துரத்தி கடித்து வருகின்றன.

இந்த பிரச்சினை குறித்து மாநகராட்சி கமிஷனர் லதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கடும் நடவடிக்கை

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 100 வார்டுகளில் மாநகராட்சி அனுமதி பெறாமல் கோழி மற்றும் மாட்டு இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இவைகளில் இருந்து இறைச்சிக்கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் துர்நாற்றம் மற்றும் சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. அனுமதி இல்லாமலும் மற்றும் மாநகராட்சி உரிமம் பெறாமலும் செயல்படும் இறைச்சி கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மீது மாநகராட்சியால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்துள்ளார்.

வருகிற ஞாயிற்றுகிழமை முதல் அனுமதி பெறாத இறைச்சிக்கடைகள் மீது சோதனையை தீவிரப்படுத்த மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


Page 63 of 519