Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

புதுக்கோட்டையில் தூய்மைப் பகுதி:ரூ. 3.75 கோடியில் திட்ட மதிப்பீடு

Print PDF
தினமணி        12.04.2013

புதுக்கோட்டையில் தூய்மைப் பகுதி:ரூ. 3.75 கோடியில் திட்ட மதிப்பீடு


புதுக்கோட்டை நகரில் தூய்மைப்பகுதி அமைக்க ரூ. 3.75 கோடியில் திட்ட மதிப்பீடு கருத்துருவை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ள மாவட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கு நகர் நல இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து நகர் நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர். சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை நகரம் மிகவும் அழகாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட நகரம்.  இன்று எல்லாத் தெருக்களும் குப்பை மேடாகக் காட்சி தருகின்றன. தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பல நகரங்களில் தூய்மைப் பகுதி என சில பகுதிகளை அறிவித்து அதனை சுத்தமாகப் பராமரிக்கின்றனர். திருச்சியில் அய்யப்பன் கோவில் உள்ள பகுதியை தூய்மைப் பகுதியாக அறிவித்துப் பாதுகாக்கப்படுகிறது.

புதுக்கோட்டையிலும் எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து டி.வி.எஸ். கார்னர் வரை உள்ள சாலையை தூய்மைப் பகுதியாக அறிவித்து பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.  ஏனென்றால் இந்த சாலையில் தான் நீதிமன்றம், ஆட்சித் தலைவர் முகாம் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகம், அரசு மன்னர் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, முக்கிய பிரமுகர்கள் தங்கும் ரோஜா இல்லம், மாவட்ட நீதிபதி இல்லம் ஆகியவை அமைந்துள்ளன்.  எனவே இந்தச் சாலையை தூய்மை பகுதியாக்க வேண்டும் என மாவட்ட திட்டக்குழுத் தலைவரும் மாவட்ட ஊராட்சித் தலைவருமான வி.சி. ராமையாவிடம் கோரிக்கை வைத்தோம். இந்தக் கோரிக்கையை ஏற்று அந்தச் சாலையின் இருபக்கமும் கட்டை கட்டி நடைமேடை அமைத்து அழகுச் செடிகளும், நிழல்தரும் மரங்களும் அமைத்து பராமரிக்க திட்ட மதிப்பீடு செய்து, திட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ரூ.3.75 கோடி மதிப்பிலான திட்டத்தை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளார்.  விரைவில் அந்த திட்டம் அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு நகர் நல இயக்கம் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவிக்கிறது.
 

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை கும்மிடிப்பூண்டி

Print PDF
தினமணி       10.04.2013

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை கும்மிடிப்பூண்டி


கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு புளூ கிராஸ் எனப்படும் மிருக வதை தடுப்பு அமைப்பின் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி திங்கள்கிழமை துவங்கியது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பெருகிவரும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் வண்ணம் பேரூராட்சித் தலைவர் வெ.முத்துகுமரன் பரிந்துரையின் பேரில், செயல் அலுவலர் மணிவேல், துணைத் தலைவர் கோமளா கேசவன் மேற்பார்வையில் மிருக வதை தடுப்பு அமைப்பின் மூலம் தெருநாய்களைப் பிடித்து அவைகளுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி துவங்கியுள்ளது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் முதல் வார்டான கோட்டக்கரை அருகே துவங்கிய இந்த பணியின் முதல் நாளான்று சென்னை வேளச்சேரி ருக்மணி அருண்டேல் டிரஸ்டின் சார்பாக மிருகவதை தடுப்பு அமைப்பில் இருந்து ராஜேஷ், கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட 35 நாய்கள் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவைகளுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை நடைபெற்று 10 தினங்களில் மீண்டும் கும்மிடிப்பூண்டியில் அவைகள் பிடிபட்ட இடத்துக்கே கொண்டு விடப்படும் என மிருகவதை தடுப்பு அமைப்பின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள 15 வார்டுகளிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவைகளுக்கு கருத்தடை செய்யப்பட்டு அவைகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட பேரூராட்சியின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பேரூராட்சித் தலைவர் முத்துகுமரன் தெரிவித்தார்.

இப்பணிகளை பேரூராட்சி கவுன்சிலர்கள் மலர் சந்திரன், தீனதாயளன், பேருராட்சி அலுவலர்கள் ரவி, ஆனந்தன் உட்பட்டோர் உடனிருந்து செய்தனர்.
 

அண்ணாமலை நகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை

Print PDF
தினமணி       10.04.2013

அண்ணாமலை நகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை


சிதம்பரம் அண்ணாமலைநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

அண்ணாமலைநகர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்து சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு கால்நடை மருத்துவர் ஏ.ஜவகர் தலைமையிலான குழுவினர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.

மேலும் நாய்களுக்கு ரேபீஸ் நோய் தடுப்பூசியும் போடப்பட்டது. இதுவரை 71 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என பேரூராட்சி செயல்அலுவலர் தெரிவித்தார்.
 


Page 65 of 519