Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தெரு நாய்களுக்கு கருத்தடை பிடித்து சென்றது "புளூ கிராஸ்'

Print PDF
தினமலர்                09.04.2013

தெரு நாய்களுக்கு கருத்தடை பிடித்து சென்றது "புளூ கிராஸ்'


கும்மிடிப்பூண்டி:பேரூராட்சியில் சுற்றி திரிந்த நாய்களுக்கு, கருத்தடை சிகிச்சை அளிப்பதற்காக, "புளூ கிராஸ்' அமைப்பு சார்பில், நாய்கள் பிடித்து செல்லப்பட்டன.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், தெருக்களில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரு நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை அளிக்க, அரசு உத்தரவு பிறப்பித்தது. அத்திட்டம், "புளூ கிராஸ்' அமைப்பு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள முதல் மூன்று வார்டுகளில் நேற்று, 35 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட நாய்களின் நிறம், எந்த பாலினம், எந்த தெருவில் பிடிக்கப்பட்டது போன்ற தகவல்கள்குறிப்பெடுக்கப்பட்டு, சென்னை வேளச்சேரியில் உள்ள "புளூ கிராஸ்' அமைப்பிடத்திற்கு கூண்டு அடைத்த பேருந்தில் கொண்டு செல்லப்பட்டது.கருத்தடை சிகிச்சை அளித்தபின், பிடித்து செல்லப்பட்ட நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடப்படும். அதன் பின் அடுத்த மூன்று வார்டுகளில், இதேபோன்று தெரு நாய்கள் பிடித்து செல்லப்பட உள்ளன.
 

சேமனூரில் சுற்றிதிரிந்த300 தெரு நாய்களுக்கு கு.க ஆபரேசன்

Print PDF
தினகரன்       09.04.2013

சேமனூரில் சுற்றிதிரிந்த300 தெரு நாய்களுக்கு கு.க ஆபரேசன்


சோமனூர்:  சோமனூர் பகுதியில் சுற்றிதிரியும் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்ய கருமத்தம்பட்டி பேரூராட்சி முடிவு செய்தது. இதனையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்ட தெருநாய்கள் படிக்கப்பட்டன. அவைகள்  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு  மைசில் விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு தனி வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அங்கு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  

அந்த நாய்களுக்கு 2 நாள் மையத்தில் வைத்து  மருந்து மாத்திரைகள், உணவுகள் வழங்கப்படுகின்றன. பின் அந்த நாய்களை பிடித்த இடத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.    கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம், செயல் அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் குன்னூர் அருவங்காடு  மைசில் விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று  தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் வழிமுறைகள் குறித்து  பார்வையிட்டனர்.
 

கும்மிடிப்பூண்டியில், சுற்றித்திரிந்த 35 நாய்களை புளூகிராஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்

Print PDF
தினத்தந்தி        09.04.2013

கும்மிடிப்பூண்டியில், சுற்றித்திரிந்த 35 நாய்களை புளூகிராஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்


கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பல தெருக்களில் பெருகிவரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தும் விதத்தில் அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்திட பேரூராட்சித்தலைவர் வி.முத்துகுமரன் தலைமையில் செயல்அலுவலர் கோ.மணிவேல் மற்றும் துணைத்தலைவர் கோமளா கேசவன் ஆகியோர் சென்னையில் உள்ள புளூகிராஸ் அமைப்பிற்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இதனையடுத்து வேளச்சேரி ருக்குமணி அருண்டேல் டிரஸ்டின் சார்பில் புளூகிராஸ் அமைப்பில் இருந்து ராஜேஷ், கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல்கட்டமாக கும்மிடிப்பூண்டி தெருக்களில் சுற்றித்திரிந்த 35 நாய்களை சென்னைக்கு பிடித்து சென்றனர். அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து 10 நாட்களுக்கு பின்னர் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடப்படும் என்று புளூகிராஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.
 


Page 66 of 519