Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஊராட்சி பகுதிகளை இணைக்க முடிவு

Print PDF
தினகரன்       08.04.2013

மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஊராட்சி பகுதிகளை இணைக்க முடிவு


ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஊராட்சிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 2015ம்ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஈரோடு நகராட்சி, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர் ஆகிய 4 மூன்றாம் நிலை நகராட்சிகளை ஒருங்கிணைத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இதற்காக உள்ளாட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.61.89 கோடியும், ஜெர்மன் நிதி ஆதாரத்தில் கடனாக ரூ.71.14 கோடியும், மானியமாக ரூ.62.77 கோடியும், உள்ளூர் திட்டக்குழு மானியமாக ரூ.3.60 கோடியும், கூடுதல் மானியமாக ரூ.9.82 கோடியும் என ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் செல்லும் பகுதிகள் 4 பேக்கேஜ்களாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் கட்டுமான பணிகள் 5வது பேக்கேஜாகவும் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் 3 பேக்கேஜ் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

4வது மண்டலத்திற்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் 4வது பேக்கேஜ் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4 கோடி ரூபாய் அளவிற்கு வசூலிக்கப்பட்டுள்ளது.

பழைய மாநகராட்சி 45 வார்டுகளில் மட்டுமே இந்த பணிகள் நடந்து வருவதால் புதியதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளையும் இணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சூரியம்பாளையம், பெரியஅக்ரஹாரம் பேரூராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்து பகுதிகளையும் இணைக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவாக நடந்து வரும் நிலையில் திட்டப்பணிகள் அனைத்தும் 2015ம்ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படவுள்ளது.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக 5 பேக்கேஜ்களாக பணிகள் நடந்து வருகிறது. தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திண்டல், வில்லரசம்பட்டி, முத்தம்பாளையம், கங்காபுரம், எல்லப்பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஊராட்சிகளையும் இணைத்து பணிகளை செய்ய கூடுதலாக 100 கோடி ரூபாய் செலவாகும். இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. புதியதாக 5 ஊராட்சிகளையும் இணைத்து பணிகளை மேற்கொண்டால் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைய இன்னும் அதிக அளவில் கால அவகாசம் தேவைப்படும்’ என்றார்.
 

ரூ. 45 லட்சம் மதிப்பில் கொசு ஒழிப்பு இயந்திரங்கள்

Print PDF

தினமணி       07.04.2013

ரூ. 45 லட்சம் மதிப்பில் கொசு ஒழிப்பு இயந்திரங்கள்

சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிக்கும் பணிக்காக ரூ. 45 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மண்டலங்களுக்கு சனிக்கிழமை  வழங்கப்பட்டன.

இது குறித்து சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்துவதற்கு புதிய 156 கைத்தெளிப்பான்களும், ஆட்டோவில்  பொருத்தக்கூடிய 15 பெரிய புகைப் பரப்பும் இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த இயந்திரங்களின் மொத்த மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும்.

இந்த இயந்திரங்களை ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி மண்டலங்களுக்கு சனிக்கிழமை வழங்கினார். இந்த  நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் மகேஷ்வரன், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) ஏ. பழனி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

 

"தூய்மை பாரத இயக்கத்தில் வீடுகள்தோறும் சுகாதாரம் குறித்து கணக்கெடுக்கப்படும்'

Print PDF
தினமணி        06.04.2013

"தூய்மை பாரத இயக்கத்தில் வீடுகள்தோறும் சுகாதாரம் குறித்து கணக்கெடுக்கப்படும்'


திருவாரூர் மாவட்டத்தில் வீடுகள்தோறும் தூய்மை பாரத இயக்கத்தில் சுகாதாரம் குறித்த கணக்கெடுப்புப் பணி நடத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இதுதொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசுத் திட்டமான முழு சுகாதார இயக்கம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் மத்திய அரசால் நிர்மல் பாரத் அபியான் (தூய்மை பாரத இயக்கம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் குடும்பவாரியான சுகாதாரம் குறித்த கணக்கெடுப்புப் பணி மாவட்டத்தில் 430 ஊராட்சிகளிலும் தொடங்கவுள்ளது. இப்பணியில் ஊராட்சிச் செயலர்கள் வீடு வீடாகச் சென்று ஏப்.20-ம் தேதிக்குள் பணியை முடிக்க வேண்டும்.

கணக்கெடுப்புப் பணியை கண்காணிக்க மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு பணி மேற்பார்வையாளர், வட்டத்துக்கு ஒரு மண்டல அலுவலர் நியமிக்கப்படவுள்ளனர். மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

தனிநபர் கழிவறை, பள்ளிக் கல்வித் துறை, அங்கன்வாடி கழிவறைகள், மகளிர் சுகாதார வளாகம், ஆண்கள் சுகாதார வளாகம் ஆகியவைற்றை ஊராட்சிகள் சுத்தமாக வைத்துக் கொண்டால் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். சாமுவேல் இன்பதுரை உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
 


Page 67 of 519