Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

Print PDF
தினமணி         01.04.2013

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

திருப்பத்தூர் நகரில் பெருகி வரும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக பேரூராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு சனிக்கிழமை கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சித் தலைவர் ஆர்.சோமசுந்தரம், செயல் அலுவலர் சங்கரநாராயணன் ஆலோசனையின் பேரில் நாய்களைப் பிடிக்க சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் திருப்பத்தூர் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 60-க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து வந்தனர்.

இவைகளுக்கு அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் சதீஷ்குமார் தலைமையில் மருத்துவர்கள் விஸ்வநாதன், பாலகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்தனர்.
 

தெரு நாய்களுக்கு கருத்தடை: கமுதி பேரூராட்சி ஏற்பாடு

Print PDF
தினமணி         31.03.2013

தெரு நாய்களுக்கு கருத்தடை: கமுதி பேரூராட்சி ஏற்பாடு


கமுதியில் பெண் நாய்களுக்கு பேரூராட்சி ஏற்பாட்டின்பேரில், கருத்தடை அறுவை சிகிச்சை, புதன் கிழமை நடைபெற்றது.

கமுதியில் பெருகி வரும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு பெரும் தொல் லைகள் ஏற்பட்டுள்ளது. தெரு நாய்கள் கடித்ததால் சிறுவர், சிறுமிகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக கமுதி பேரூராட்சியில் புகார் செய்ய ப்பட்டது.

இதையடுத்து கமுதியில் நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பேரூராட்சித் தலைவர் எஸ்.கே.சி. ரமேஷ் பாபு, செயல் அலுவலர் ஏ. தனபாலன் ஆகியோர் ஆலோசனையின்பேரில் நாய் பிடிக்கும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள், கமுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

கமுதி-கோட்டைமேட்டில் உள்ள அரசு கால்நடைகள் மருத்துவமனையில் பெண் நாய்களுக்கு மருத்துவர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை அளித்தனர்.
 

"பிளாஸ்டிக்' விதிமுறைகளை பின்பற்றினால் பயன்

Print PDF
தினமலர்       28.03.2013

"பிளாஸ்டிக்' விதிமுறைகளை பின்பற்றினால் பயன்


ஊட்டி:"தடை செய்யப்பட்ட "பிளாஸ்டிக்' பொருட்களின் விதிமுறைகளை வியாபாரிகளும், பொதுமக்களும் கடைபிடித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்' என மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், பிளாஸ்டிக் கேரி பைகளை பயன்படுத்த, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இருப்பினும், பல கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் விற்கப்படுவதும், நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ரெய்டு நடத்தி, பறிமுதல் செய்து, அபராதம் விதிப்பதும் வாடிக்கையாக உள்ளது. "கடைக்காரர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் அனுமதிக்கப்பட்டவை தான்' என, பல வியாபாரிகளும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் கூறி வந்ததால், வியாபாரிகள், நகராட்சி அதிகரிகளுக்கும் இடையே "கருத்து மோதல்' தொடர்ந்து வருகிறது.குழப்பத்திற்கு தீர்வுஇந்நிலையில், பிளாஸ்டிக் கேரி பைகளை பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக, நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், செயலர் ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கை:அனைத்து வகை, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர், கப், பிளாஸ்டிக் மூடப்பட்ட காகித தட்டுகளை வியாபாரிகள் பயன்படுத்த கூடாது.விற்கப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மீது, அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண், 40 மைக்ரான் எடை உள்ளவை என்ற விபரம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

இதுகுறித்த விபரங்கள் அடங்கிய பதிவேட்டை, அனைத்து கடை உரிமையாளர்களும் பராமரிக்க வேண்டும்.உள்ளாட்சி அலுவலர்களின் ஆய்வின் போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்கப்பட்டால், ஒரு கடையில் முதல் முறை பறிமுதல் செய்யப்படும் ஒவ்வொரு அரை கிலோ பிளாஸ்டிக் பைகளுக்கும் 500 வீதமும், 2ம் முறை, ஒவ்வொரு அரை கிலோவுக்கும் 750 வீதமும், 3வது முறை ஒவ்வொரு அரை கிலோவுக்கும் 1000 ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படும்.

இதையும் மீறி அக்கடையில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்கப்பட்டால், பயன்படுத்தினால் கடை உரிமம், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பால் ரத்து செய்யப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தினால், அவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்பினர் 100 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் கடைகளில், கேரி பைகளை கேட்காமல், வீடுகளில் இருந்தே துணிப் பைகளை எடுத்து வர வேண்டும். இந்த விதிமுறைகளை வியாபாரிகளும், பொதுமக்களும் கடைபிடித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


Page 72 of 519