Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகராட்சியில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF
தினமலர்                27.03.2013

நகராட்சியில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு


திருத்தணி:நகராட்சி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக, 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருத்தணி நகராட்சியில், மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 168 தெருக்கள் உள்ளன. இங்குள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.மேலும், தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் விரட்டி கடிக்கின்றன.
 
குறிப்பாக, சன்னிதி தெரு, மேட்டுத் தெரு, ம.பொ.சி., சாலை, ஜோதிசாமி தெரு, திருக்குளம், ராதாகிருஷ்ணன் தெரு, கச்சேரிதெரு, காந்திரோடு மற்றும் சென்னை பழைய சாலை ஆகிய இடங்களில் ஐந்து முதல், 10 நாய்கள் ஒன்றாக சுற்றித் திரிகின்றன.இதில், சொறி நாய்களும் சுற்றி திரிவதால், மக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் தற்போது, நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இதுகுறித்து, நகராட்சிஆணையர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:மக்கள் புகாரை தொடர்ந்து, நாய்களை பிடித்து திருத்தணி உதவி கால்நடை துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, நான்கு மருத்துவர்கள் கருத்தடை செய்கிறோம்.
 
இம்மாதம் முதல் தேதியில் இருந்து, நேற்று வரை, 35 நாய்களுக்கு கருத்தடை செய்து உள்ளோம். இனிவரும் காலங்களில் வாரத்தில் ஒரு நாள், தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்படும்.சொறி நாய்களை பிடித்து தனிஅறையில் அடைத்து வைக்கப்படும். நாய்களை பிடிப்பதற்கு, நகராட்சி நிதியில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்ய, நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
 

கழிவுநீர் கால்வாய் பணி:நகர்மன்றத் தலைவர் ஆய்வு

Print PDF
தினமணி         26.03.2013

கழிவுநீர் கால்வாய் பணி:நகர்மன்றத் தலைவர் ஆய்வு


திண்டிவனம் நகராட்சி சார்பில், நேருவீதியில் உள்ள கிருஷ்ணபிள்ளை வீதியில் துவங்கி மேம்பாலம் வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் அண்மையில் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, ஆணையர் அண்ணாதுரை, நகர்மன்ற உறுப்பினர் சுதாகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

கால்வாய் அமைக்கும் பணியால் நேருவீதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு இப்பணியை விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளிடம் நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.
 

திருப்பூரில் ஆட்டிறைச்சி என்று கூறி விற்கப்பட்ட 60 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினத்தந்தி            25.03.2013

திருப்பூரில் ஆட்டிறைச்சி என்று கூறி விற்கப்பட்ட 60 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


திருப்பூரில் ஆட்டி றைச்சி என்று கூறி கலப் படம் செய்து விற்கப் பட்ட 60 கிலோ மாட்டு இறைச்சியை மாநக ராட்சி அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

இறைச்சிக்கடைகளில் ஆய்வு

திருப்பூர் கே.செட்டிபாளை யம் பகுதியில் உள்ள இறைச் சிக்கடைகளில் ஆட்டிறைச்சி யுடன் மாட்டுக்கறியை கலப் படம் செய்து விற்பனை செய்வதாக திருப்பூர் மாநகர சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாநகர் நல அதிகாரி செல் வக்குமார் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் முரளிகண்ணன், பிச்சை, முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கே.செட்டி பாளையத்தில் உள்ள இறைச் சிக்கடைகளில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.

60 கிலோ பறிமுதல்

இந்த ஆய்வில் கறி கடை காரர்கள் மாநகராட்சி சீல் இல்லாமல் இறைச்சி விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித் தனர். மேலும் ஆட்டுக்கறி யுடன் மாட்டுக்கறியை சேர்த்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. கே.செட்டி பாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள இறைச்சிக்கடையில் 20 கிலோ மாட்டுக்கறி, சரவன மகால் கல்யாண மண்டப வீதியில் உள்ள கறிக்கடையில் 40 கிலோ மாட்டு இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆட்டி றைச்சி என்று கூறி மாட்டுக்கறி விற்றதை அதிகாரிகள் பறி முதல் செய்ததால் அந்த பகுதி பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநகர நல அதிகாரி செல்வக்குமார் கூறும்போது, ஆட்டு இறைச்சி என்று பொதுமக்களிடம் கூறி மாட்டு இறைச்சியை கலந்து விற்பனை செய்வது குற்றமா கும். பொதுமக்கள் விழிப்புணர் வுடன் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஆய்வுகள் தொட ரும் என்றார்.
 


Page 74 of 519