Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மதுக்கரை பேரூராட்சியில் 124 நாய்களுக்கு கு.க ஆபரேஷன்

Print PDF
தினகரன்         25.03.2013

மதுக்கரை பேரூராட்சியில் 124 நாய்களுக்கு கு.க ஆபரேஷன்


கோவை, :மதுக்கரையில் 124 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.

மதுக்கரை பேரூராட்சியில் தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் பெறப்பட்டது. இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சண்முகராஜா, செயல் அலுவலர் கணேஷ்ராம், சுகாதார அலுவலர் திருவாசகம் உத்தரவின் பேரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி துவங்கியது. கடந்த 2 மாதத்தில், மதுக்கரை மார்க்கெட், காந்திநகர், மலைச்சாமி கோயில் வீதி, சர்ச் காலனி, மரப்பாலம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதியில் 124 நாய்கள் பிடிக்கப்பட்டன.
 
இந்த நாய்களுக்கு மதுக்கரை மார்க்கெட்டில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மருத்துவமனையில் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் கணேஷ்ராம் கூறுகையில், ‘’ நாய் வளர்ப்பவர்கள், தங்கள் வீட்டு வளாகத்தில் பாதுகாப்பான முறையில் வளர்க்கவேண்டும். நாய்களுக்கு ரேபீஸ் நோய் பாதிப்புள்ளதா என கண்டறியவேண்டும். வீட்டு நாய்களுக்கு உரிமம் பெறவேண்டும். உரிமம் பெறாமல் ரோட்டில் திரியும் நாய்கள் தெரு நாய்களாக கருதப்படும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை தெரு நாய்களுடன் விளையாட விடக்கூடாது, ’’என்றார்.
 

கமுதியில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவமனை நிறுவ பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Print PDF
 தினமணி              24.03.2013
 
கமுதியில் நாய்களுக்கு கருத்தடை மருத்துவமனை

கமுதியில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவமனை நிறுவ பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கமுதி பேரூராட்சி கூட்டம், தலைவர் எஸ்.கே.சி. ரமேஷ் பாபு தலைமையில் துணைத் தலைவர் குருசாமி, செயல் அலுவலர் ஏ.தனபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 13 கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தலைமை எழுத்தர் அ. செல்வராஜ், 8 தீர்மானங்களை வாசித்தார். அவை:

நிறைவேற்றப்பட்டன. கமுதி, அபிராமம், சாயல்குடி ஆகிய பேரூராட்சிகளில் நாய்களை அடித்துக் கொல்வதற்குப் பதிலாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அரசு பரிந்துரையை ஏற்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி  இந்த 3 பேரூராட்சிகளுக்கும் சேர்த்து, கமுதி வாரச் சந்தை வளாகத்தில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவமனை நிறுவ கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக ரூ.3 லட்சம் செலவில் கட்டடம் கட்டும் பணியை துரிதமாகத் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
 

துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச சீருடை

Print PDF
தினமணி          24.03.2013

துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச சீருடை


கிருஷ்ணகிரி நகர்மன்றத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

நகர்மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு நகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச சீருடை, காலனி ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில், சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 


Page 76 of 519