Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

Print PDF

தினமணி              23.03.2013

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

வால்பாறை பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

வால்பாறை டவுன், சிறுவர் பூங்கா, கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவே  தயங்குகின்றனர்.

நாளுக்கு நாள் பெருகும் இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க, நாய்களுக்கு கருத்தடை  அறுவை சிகிச்சை செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி வால்பாறை கால்நடை மருத்துவமனையில் புதன்கிழமை காலை நடைபெற்ற முகாமில், பல்வேறு பகுதிகளில் இருந்து நகராட்சிப் பணியாளர்கள் மூலம் பிடித்து வரப்பட்ட நாய்களுக்கு கால்நடை மருத்துவர் செந்தில்நாதன் அறுவை சிகிச்சை செய்தார்.

Last Updated on Saturday, 23 March 2013 10:48
 

விடுபட்ட வீடுகளின் கழிவுநீரை புதை சாக்கடையில் இணைக்க நடவடிக்கை

Print PDF

தினமணி              23.03.2013

விடுபட்ட வீடுகளின் கழிவுநீரை புதை சாக்கடையில் இணைக்க நடவடிக்கை

புதுச்சேரி உருளையான்பேட்டை பகுதியில் விடுபட்ட வீடுகளின் கழிவுநீர் இணைப்பையும் புதைசாக்கடைக் குழாயில் இணைக்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உருளையான்பேட்டை தொகுதியில் பொது சுகாதாரத்தை வலியுறுத்தி, நோய் பரவாமல் தடுப்பது குறித்தும், புதைசாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில், கழிவுநீரை வாய்க்கால்களில் விடாமல் தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

நோய்கள் பரவாமல் தடுக்க வீதிகளில் உள்ள வாய்க்கால்களில் கழிவுநீர் விடுவதைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

மேலும் வீடுகளில் இருந்து இன்னமும் புதைசாக்கடை குழாய்க்கு கழிவுநீர் இணைப்பு தராதவர்களை வருவாய்த்துறை மூலம் எச்சரித்து நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தார்.

கூட்டத்தில், அரசு கொறடா ஜி.நேரு, துணை ஆட்சியர் வின்சென்ட் ராயர், சுகாதாரத்துறை இயக்குநர் கே.வி.ராமன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மனோகர், உள்ளாட்சித்துறை இயக்குநர் ரவிபிரசாத், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், வருவாய் அதிகாரி சக்திவேல், வட்டாட்சியர்கள் ரமேஷ், தில்லைவேல், அமைச்சரின் தனிச் செயலர் அசோகன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் காளிமுத்து, பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 23 March 2013 10:42
 

அகதிகள், நரிக்குறவர்கள் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி               23.03.2013

அகதிகள், நரிக்குறவர்கள் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னையில் செங்கல் சூளையில் பணிபுரிவோர், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், அகதிகள் தொழில் ரீதியாக இடம் பெயர்ந்தோர், குடிசை பகுதிகளில் வாழும் தெருவோரக் குழந்தைகள், நரிக்குறவர்கள் மற்றும் கழைக்கூத்தாடிகள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஒரே இடத்தில் நிலையாக வசிப்பது இல்லை. இவர்கள் அடிக்கடி இடம் பெயர்வதால், இவர்களின் குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசிகள் போடப்படுவதில்லை.

இதனை கருத்தில் கொண்டு இடம் பெயர்ந்தோருக்கு என சிறப்பு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 22.12.2012 அன்று இடம் பெயர்ந்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மீண்டும் தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து தினங்களான 20.01.2013 மற்றும் 24.02.2013 ஆகிய இரண்டு தினங்களிலும் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை  (சனிக்கிழமை) சென்னை மாநகரம் முழுவதும் குழுக்கள் அமைத்து, இடம் பெயர்ந்தோர்கள் வசிக்கும் 844 இடங்கள் கண்டறியப்பட்டு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கணக்கிட்டு, ஆயிரத்து 496 குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Page 78 of 519