Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 50 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Print PDF

தினமலர்            22.03.2013

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 50 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 55 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு, அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வீட்டு மற்றும் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பொதட்டூர்பேட்டைபேரூராட்சியில் உள்ள, தெருக்களில் சுற்றித் திரிந்த, வீட்டு மற்றும் தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

புளூகிராஸ் நிறுவனம் சார்பில், செய்யப்பட்ட இந்த சிகிச்சையில், 55 நாய்களுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், தலைவர் தண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Friday, 22 March 2013 12:02
 

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Print PDF
தினமணி           22.03.2013

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் வணிகரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் தெற்கு அலங்கம் பகுதி சுல்தான்ஜியப்பா சந்தில் தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், கப்புகள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்குப் புகார்கள் வந்தன. இதன் பேரில், நகர் நல அலுவலர் சிவனேசன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சுல்தான்ஜியப்பா சந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில்,பிளாஸ்டிக் வியாபாரி விஜயகுமாரின் கடை, கிடங்கில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகளை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு உள்பட்ட பிளாஸ்டிக் பைகள் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 40 மைக்ரானுக்கு அதிகமான பிளாஸ்டிக் பொருள்களே கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்துவிட்டதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் தெற்கு அலங்கம் சாலையில் திடீர் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவர் எம். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதையடுத்து, வணிகர்களைக் காவல் நிலையத்துக்கு வருமாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ. சங்கர் கூறினார். இதன் பின்னர், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விஜயகுமார், தனது கடையில் நகராட்சி அலுவலர்கள் அத்து மீறி நுழைந்து பொருள்களைப் பறிமுதல் செய்தனர் என மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றும்போது இருவர் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், தாக்க முற்பட்டனர் என சுகாதார ஆய்வாளர் சேவியர் புகார் செய்தார். இந்த இரு புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

90 ஆண்டுகளை கடந்த பிரிட்டிஷ் பாதாள சாக்கடை சேதமானதால் மாற்ற முடிவு

Print PDF

தினமலர்            21.03.2013

90 ஆண்டுகளை கடந்த பிரிட்டிஷ் பாதாள சாக்கடை சேதமானதால் மாற்ற முடிவு

மதுரை:மதுரை மாநகராட்சியில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், 90 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. "கடந்த வாரம் ரோடு போட்டாங்க... எங்கே போச்சுனே தெரியலே...', "போன மாசம் தான், இந்த பில்டிங் கட்டினாங்க... அதுக்குள்ள விரிசலாயிருச்சு...', காலையில தான் வங்கிட்டு வந்தேன்... அதுக்குள்ள பொகஞ்சு போச்சு...' இவை தான், அரசு சார்ந்த பணிகள், பொருட்களை அனுபவித்த சராசரி மக்களின் பேச்சு. கோடிகளை கொட்டி, ஆடம்பரமாய் தொடங்கும் அரசுப் பணிகள், சில நாட்களிலேயே "புஸ்' ஆவது, வாடிக்கை. தரமற்ற பணிகளால், நீண்ட காலம் பயன்படுத்த முடிவதில்லை.ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியில், மக்களுக்காய் பணிகள் நடந்த போது, அதில் தரம் இருந்தது; அந்த வகையில், ' காலத்தில் அமைக்கப்பட்ட பாதாளச் சாக்கடை, 90 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 1924ல், தெற்குமாசி வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் செங்கல் கற்களால் ஆன பாதாள சாக்கடை திட்டத்தை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அமைத்தனர். சுதந்திரம் பெற்ற பிறகு, நகராட்சியிலிருந்து மாநகராட்சியாய் பல பரிணாமங்களை மதுரை பார்த்த பிறகும், நம்முடன் பயணித்துக் கொண்டிருந்தது, பிரிட்டிஷ் பாதாள சாக்கடை. மக்கள் தொகை அதிகரிப்பால் நாளடைவில் கழிவுநீர் வெளியேற்றம் அதிகரித்து, தெற்குமாசி வீதி பகுதியில், அடிக்கடி சாக்கடை பொங்கியது. நேற்று, மாநகராட்சி அதிகாரிகள் தோண்டி பார்த்த போது, பாதாள சாக்கடை சேதமடைந்து அதிலிருந்த செங்கல்கற்கள் சரிந்திருந்தன. அதை மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. நகர் பொறியாளர் மதுரம் கூறுகையில், ""1924ல் அமைக்கப்பட்ட பழமையான சாக்கடை சேதமடைந்து விட்டது. அதை சரிசெய்தால் மட்டுமே, வருங்காலங்களில் பாதுகாப்பாக இருக்கும் என்பதால், பணியை தொடங்கியுள்ளோம். நான்கு நாட்களில், புதிய பாதாள சாக்கடை அமைக்கப்படும், என்றார். 

 


Page 79 of 519