Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தாம்பரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையா 9884900315க்கு டயல் பண்ணுங்க

Print PDF
தினகரன்                   14.03.2013

தாம்பரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையா 9884900315க்கு டயல் பண்ணுங்க


தாம்பரம்: தாம்பரம் நகராட்சி சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
நகராட்சி பொது நிதி ரூ.10 லட்சத்தில் நாய்களுக்கான அறுவை சிகிச்சை அரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும் நகரம் முழுவதும் 3 ஆயிரத்து 371 நாய்கள் இருப்பதாக கணெடுக்கப்பட்டு, இது வரை 1,476 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. நாய்களுக்கு ஐந்து வகையான தடுப்பு ஊசிகள் போடப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களின் காதில் அடை யாளம் இடப்படுகிறது.

இதுகுறித்து தாம்பரம் சண்முகம் சாலை, சேலை யூர் கேம்ப் ரோடு ஆகிய இடங்களில் நகரமன்ற தலைவர் கரிகாலன் தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், பொதுமக்களுக்கு தெருநாய்கள் குறித்த அச்சம் தேவையில்லை.

தங்கள் பகுதியில் தெருநாய்கள் தொல்லை இருந்தால், 9884900315, 044- 22266206 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

ஒரே நாளில் 121 நாய்கள் பிடிபட்டன

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிதாக 8 நாய் பிடிக்கும் வாகனம் வாங்கப்பட்டு நாய் பிடிக்கும் பணி நடைபெற்றது. கடந்த 11ம் தேதி மட்டும் 121 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 15 மண்டலத்திலும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த மண்டலத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் நாய் பிடிக்கும் வாகனம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Last Updated on Friday, 15 March 2013 04:57
 

அடையாறு ஆற்றில் கொசு ஒழிப்புப் பணிகள்

Print PDF
தினமணி                   13.03.2013

அடையாறு ஆற்றில் கொசு ஒழிப்புப் பணிகள்


சென்னையில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தும் விதமாக அடையாறு ஆற்றில் கொசு ஒழிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

அடையாறு ஆற்றில் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பகுதிகளில் இந்தப் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில் கொசுக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்கு தொல்லை கொடுக்கும் "கியூலஸ்' கொசுக்கள் தேங்கும் நீர், நீர்வழிப்பாதைகள் ஆகியவற்றில் உற்பத்தியாவதால் அவற்றை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுப்பணித்துறையுடன் இணைந்து அடையாறு ஆற்றில் உள்ள மணல் திட்டுகள், ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபடுகிறது. மணல் மேடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் கொசு மருந்துகளைக் கட்டுமரங்களில் சென்று ஊழியர்கள் தெளிக்கின்றனர்.

இந்தப் பணிக்காக 50 பெரிய புகைபரப்பும் இயந்திரங்கள், 451 கைத் தெளிப்பான்கள், 242 சிறிய புகைபரப்பும் இயந்திரங்கள், 6 கட்டுமரங்கள் ஆகியவை தினமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நாய்களுக்கு கருத்தடை: விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி       13.03.2013

நாய்களுக்கு கருத்தடை: விழிப்புணர்வுப் பேரணி

திருமழிசை பேரூராட்சி சார்பில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆத்துக்கால் தெருவில் தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்ற பின் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.

பேரூராட்சித் தலைவர் அமுதா முனுசாமி பேரணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.  பேரணியில் பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் தெரு நாய்களுக்கு அறிவியல் ரீதியில் கருத்தடைச் செய்வது, ரேபிஸ் நோயில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவற்றை குறித்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

மேலும் வரும் 15-ம் தேதி பேரூராட்சி நிர்வாகம், புளுகிராஸ் அமைப்பு சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யும் முகாம் நடைபெறவுள்ளது.

 


Page 83 of 519